Wednesday, 29 June 2022

நபி மற்றும் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வின் வாக்குறுதி


இந்தத் தலைப்பு மனிதகுலம் அனைத்திற்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்கும் பொதுவாகவும், அனைத்து அஹ்மதிகளுக்கும் குறிப்பாகவும் உள்ள மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். நாம் சூரா அன்-நூர்(ஒளி)யை சரியாகப் படித்தால், அது உண்மையில் எல்லா மக்களுக்கும், குறிப்பாக அனைத்து முஸ்லிம்களுக்கும், அனைத்து அஹ்மதிகளுக்கும்
ஒளியைத்தருகின்ற ஒரு சூரா-அத்தியாயம் ஆகும், ஏனெனில் அல்லாஹ்(சுப்ஹா) கூறுகின்றான்:

«வஃதல்லாஹுல் லதீன ஆமனூ மின்கும் வஅமிலுஸ்-ஸாலிஹாத்தி லயஸ்தஃக்லிஃபன்னஹும் ஃபில் அர்ளி கமஸ்தஃக்லஃபல்லதீன மின் கப்லிஹிம். »

"அல்லாஹ் உங்களுள் (அவனது ஏகத்துவத்திலும், அவனது தூதுச் செய்தியிலும்) நம்பிக்கைக் கொண்டு, நற்செயலாற்றுபவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரைக் கலீஃபாக்களாக்கியது போன்று இப்பூமியில் நிச்சயமாக கலீஃபாக்களாக்கி வைப்பதாகவும்... வாக்குறுதி அளித்துள்ளான்...” சூரா அல்-நூர் வசனம் 24 : 56,

ஆகவே, (எந்த) ஒரு சந்தேகத்திற்கும் இடமின்றி, இது ஒரு அசாதாரண ஒளியை (வெளிச்சத்தை) அளிக்கின்றதொரு அத்தியாயமாகும், எனவே, நீங்கள் அதன் வசனங்களைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது நீங்கள் [அதன் தெளிவான அர்த்தங்கள் மற்றும் விளக்கங்களை] காணமுடியவில்லை என்றோ கூறிவிட முடியாது. ஹாரூன்(ஆரோன்), யஷூஆ(யோசுவா), தாவூத்(டேவிட்) மற்றும் சுலைமான் (சாலமன்) போன்றவர்களை [இறைவனின் சாந்தி இவர்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக!] மூஸா[மோஸே(அலை)] அவர்களது சமூகத்திற்கு ஃகலீஃபாக்களாக அனுப்பியதைப் போலவே முஸ்லிம் சமூகத்திலும் அவன் தனது ஃகலீஃபாக்களை (பின்தோன்றல்களை) அனுப்புவான் என்பதை அல்லாஹ் (சுப்ஹா) நமக்கு(த் தெளிவாக்கிக்) காட்டுகிறான். மேலும் இந்த ஃகலீஃபாக்கள் புனித குர்ஆனிலும் கூட குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்கள் மனிதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃகலீஃபாக்கள் அல்ல. ஆகவே, இந்த வசனம், இதற்கு முன்னர் தீர்க்கதரிசிகள் (தோன்றியபோதுக்) கொண்டிருந்த அதே பதவிகளுடன் ஃகலீஃபாக்கள் வருவார்கள் என்றுப் பொருள்படும்.

மிஷ்காத்தில் காணப்படும் ஒரு ஹதீஸில், ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் இந்த வசனத்தைத் தெளிவாக விளக்குகின்றார்கள், அதில் அவர்கள் கூறுகின்றார்கள்: [இது ஒரு நீண்ட ஹதீஸ் - நான் அதன் ஒரு பகுதியை மட்டுமே குறிப்பிடுகிறேன்]: “தகூனுன்-நுபுவ்வத்து ஃபீகும் மாஷா அல்லாஹு… ஸும்ம தகூனுஃகலீஃபதுன் அலா மின் ஹாஜின் நுபுவ்வத ஸும்ம தகூன முல்கன் அஸ்ஸன்..... ஸும்ம தகூனூ அலா மின்ஹாஜின் நுபுவ்வத்தி ஸும்ம ஸகத.”

மொழிபெயர்ப்பு: அல்லாஹ் நாடுகின்றவரை நபித்துவம் உங்கள் மத்தியில் நிலைத்திருக்கும்; பின்னர் நுபுவ்வத்தின் அடிப்படையில் ஃகலீஃபாக்கள் தோன்றுவார்கள், பின்னர் அநீதி மற்றும் கொடுங்கோன்மையான அரசர்களின் ஆட்சி இருக்கும் ... பின்னர் நுபுவ்வத்தின் அடிப்படையில் [அதாவது நபிக்குப் பிறகு] மீண்டும் ஃகலீஃபாக்கள் வருவார்கள். பிறகு அமைதியாகிவிட்டார்கள். [அதாவது இந்த வார்த்தைகளுடன் அவர்கள் நிறுத்திவிட்டார்கள்]. (மஸாஹிருல் ஹக், தொகுதி. 4 பக். 26)

இந்த வசனம் மற்றும் ஹதீஸின் ஒளியில், புனிதக் குர்ஆனிலிருந்தும், நபிமார்களின் வரலாற்றிலிருந்தும் நாம் உணர்ந்துக் கொள்வது அல்லாஹ்(சுப்ஹா) ஒரு தூதரை உலகுக்கு அனுப்பும்போது, ஒரு செய்தியைக் கொண்டுவருவதும் பிறகு (அவர் எங்கிருந்து வந்தாரோ அங்கே) திரும்பிச் செல்வதும் அல்லாஹ்வின் நோக்கமல்ல.

மாறாக, ஒவ்வொரு தீர்க்கதரிசியின் வருகையுடனும் அல்லாஹ்வின் திட்டம் என்னவென்றால், இந்தத் தீர்க்கதரிசி ஒரு மாற்றத்தையும் புரட்சியையும் கொண்டுவருகின்றார். இந்த இலக்கை அடைவதற்குத் தொடர்ச்சியானதொரு அமைப்பு இருப்பது அவசியமாகும். ஏனென்றால் எவரும் என்றென்றும் வாழப்போவதில்லை; அல்லாஹ் அவரை விதைகளை விதைக்க மட்டுமே பயன்படுத்துகிறான். ஆகவே, இந்த விதைக்கு தண்ணீர் ஊற்றுவதற்கும், களைகளை அப்புறப்படுத்துவதற்கும், விலங்குகள் அல்லது பூச்சிகள் இந்த விதை மீது தாக்குதல் நடத்துவதைத் தடுப்பதற்கும் [அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வருகையில்] ஒரு தொடர்ச்சி இருக்க வேண்டும், இதனால் அது வளர்ந்து ஒரு செடியாக மாறுகிறது. அவன் அதனைப் பாதுகாக்க வேண்டும், அதன் காரணமாக அது வளர்ந்து அதன் கிளைகளை வெவ்வேறுத் திசைகளிலும் பரவச்செய்து, அங்கே அது கனிகளையும் தந்துவிடும். மீண்டும் அது கனிகளைத் தரத் தொடங்கும் போது, அதனை நாம் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். கனி சுவையாக மாறுவதற்கு முன்பு, பல கட்டங்கள் உள்ளன, இந்தச் செடியானது கடந்துச் செல்லக்கூடிய சோதனைகளான சூறாவளிகள், வறட்சி போன்றவைகளும் உள்ளன. ஆகவே, நீங்கள் ஒரு விதையை நிலத்தில் விதைக்கும் போது, வேலை அத்துடன் முடிந்து விடாது என்பதையும் நீங்கள் காண்கிறீர்கள், ஆனாலும் செய்ய வேண்டிய வேலைகளில் தொடர்ச்சியானதொரு செயல்முறை உள்ளது.

நபித்துவம் அல்லது நுபுவ்வத் அமைப்பு (நீங்கள் இதனை மஸீஹ் என்றோ, கலிஃபத்துல்லாஹ் என்றோ அழைக்கலாம்), இது மனிதனால் அல்ல, அல்லாஹ்வினால் நிலைநாட்டப்பட்ட அமைப்பாகும் என்று திருக்குர்ஆனின் இஸ்திஃக்லாஃப் வசனத்தைப் பற்றியதொரு ஆய்வு நமக்கு எடுத்துக் காட்டுகின்றது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக மனிதன் அவனுடைய மனநிலையின் காரணமாக,அவன் தன்னை எல்லாவற்றையும் கற்றுக் கொண்டவனாகவும், அறிந்துக் கொண்டவனாகவும் நினைக்கின்றான். (இவ்வாறு) அவன் இறைஅருளின் கதவை மூடிக்கொண்டு, அல்லாஹ்(சுப்ஹா) அவனுக்கு வழங்கியுள்ள ஒளியை அணைத்துவிட முற்படுகிறான். அவன் தன்னைப் படைத்தவனைக் காட்டிலும் தான் மிகவும் கற்றுக்கொண்டவனாக பகிரங்கப்படுத்திக்கொள்கிறான், இறைதூதர்களின் வருகையின் கதவையும், இறைவெளிப்பாட்டின் கதவையும் அடைத்துவிட்டு, தானாகவே இருளில் தொலைந்து விடுகிறான், எல்லாப்பக்கங்களிலும் ஒளியின் கதவுகளை மூடிவிடும்போது, முழுமையான இருளில் வீழ்ந்து விடுகிறான்.

அல்லாஹ்(ஸுப்ஹா) ஓர் அருளுக்குரிய அமைப்பினை நிறுவி, தனது மகிழ்ச்சியின் வெளிப்பாடாகத் தன்னிடமிருந்துள்ள வெகுமதியாக அதனை நம்பிக்கையாளர்களுக்கு வழங்கி, அவன் அவர்கள் மீது திருப்திக்கொண்டுள்ளதை நிரூபிக்கும் விதமாக நம்பிக்கையாளர்களுக்கு அருளுக்குரியத் தலைமையைக் கொண்டுள்ள உன்னதமான அமைப்பை வெகுமதியாக வழங்கியிருக்க, முஸ்லிம்களின் நிலையோ இன்று இவ்வாறாக உள்ளது. அல்லாஹ், அவன் வாக்களித்திருக்கின்ற அத்தகையதொரு ஆன்மீகத் தலைமைத்துவ அமைப்பை ஏற்படுத்துகிறான், பின்னர் அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, தன்னுடைய பிரதிநிதிகளைத் தேர்வு செய்கிறான்; தக்வா, நம்பிக்கை மற்றும் நற் செயல்களைச் செய்யக்கூடிய நம்பிக்கைகொண்ட சமூகத்திற்கு அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்களுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்தில், அனுப்புகிறான். இவர்கள் அல்லாஹ்வுக்காக அனைத்தையும் தியாகம் செய்துத் தங்களைப் படைத்தவனுக்கு நன்றி செலுத்தும் பணிவான நம்பிக்கையாளர்கள் ஆவார்கள்.

ஆகவே, ஒரு ஃகலீஃபதுல்லாஹ் - அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டு அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட ஒரு ஃகலீஃபா என்று நாம் கூறலாம். அவர் (அல்லாஹ்விடமிருந்து) இறை அறிவிப்பைப் பெற்றுக் கொண்டு, தன்னை அல்லாஹ்விடமிருந்து வந்தவர் என்ற பிரகடனம் செய்வது- நபித்துவத்தின் தொடர்ச்சியையும், அந்த ஒளியின் ஒரு முழுநிறைவான நிழலையும் குறிக்கின்றது. இந்த அம்சத்தில், நபித்துவ ஒளியினுடைய அருளின் முழு வடிவத்தையும், நபித்துவத்தின் இத்தகைய பிரதிபலிப்பில் காணமுடிகின்றது. உண்மையில் ஃகலீஃபத்துல்லாஹ் தான் நம்பிக்கை மற்றும் நற்செயல் செய்கின்ற நம்பிக்கையாளர்களின் சமூகத்திற்க்கு ஒரு சாட்சியாக விளங்குகின்றார்.

எனவே ஃகலீஃபத்துல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு ஒற்றுமை மற்றும் அமைதியின் பாடத்தை கற்பிக்கின்றார்.அவர் பிளவுகளை உருவாக்கவோ, புறக்கணிப்பை ஏற்படுத்தவோ, சகோதர சகோதரிகளின் இதயங்களில் வெறுப்பை உருவாக்கவோ, அல்லது குடும்ப உறவுகளை முறித்து விடாமல், எல்லா மக்களையும் ஒன்றிணைப்பதற்காகவே இருக்கின்றார். அதற்கு மாறாக, ஒரு ஃகலீஃபத்துல்லாஹ் அனைவரையும் அவர்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகளையும், நம்மிடையேயுள்ள வேறுபாடுகளையும் மறந்துவிடுமாறு அழைக்கின்றார், அங்கு நாம் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்கிறோம் (அல்லாஹ்வின் கயிறு என்பது ஷஹாதா: லா இலாஹா இல்லல்லாஹ்வாகும்), நாம் இந்த ஆன்மீகக்கயிற்றால் இணைந்துவிடுகிறோம், அனைவரும் ஒன்றிணைந்து, அங்கே நாம் ஒரே உடலாக மாறிவிடுகிறோம். அந்த நேரத்தில், இந்த உடலின் ஒரு பகுதி துன்பப்படும்போது, முழு உடலும் பாதிப்படையும். இதையே எம்பெருமானார் நபி(ஸல்) அவர்கள் நமக்குப் புரிய வைத்திருக்கின்றார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் கயிற்றில் நம்மை இணைத்துக் கொள்வோம், அந்த சமயத்தில் நாம் முழு உம்மத்துடன் ஒற்றுமையிலும், அன்பிலும் பிணைக்கப்பட்டுள்ளதைக் காண்போம். மேலும் இன்ஷா-அல்லாஹ். உம்மத்தின் தலைமையில் ஒரு ஃகலீஃபத்துல்லாவுடன் உறுதிமிக்க அடித்தளத்திற்க்குள் நாம் வந்துவிடுவோம். அங்கே எவ்விதமான புறக்கணிப்போ, வாக்குவாதமோ, போரோ இடம்பெறாது. நமது சகோதர சகோதரிகளின் இரத்தம் சிந்தப்பட்டு கொல்லப்படுதலும் இடம்பெறாது, நாம் குடும்ப உறவுகளை முறித்துக் கொள்ளவோ அல்லது வெறுப்பு போன்றவைகளோ இருக்காது. அந்த நேரத்தில், நாம் சப்தமாகவும், தெளிவாகவும் சொல்ல முடியும் [அதாவது இந்த தக்வாவின் விதை, மற்றும் ஷஹாதா - இந்த உறுதியான நம்பிக்கை] நம் இதயத்தில் நடப்பட்டது, அதன் வேர்கள் வளர்ந்து இதயத்திற்குள் ஆழமாக ஊடுருவி, பின்னர் அங்கிருந்து [இம்முழக்கம்] வருகின்றது: “அனைவரிடத்தும் அன்பு; எவரிடத்தும் பகை இல்லை”. அந்த சமயத்தில், பள்ளிவாசல்களில் இந்த சொற்களைக் கொண்டு பெரிய விளம்பரப் பலகைகள்(சைன்போர்டுகள்), டீ ஷர்ட்டுகள் மற்றும், ஸ்டிக்கர் போன்றவற்றிலும் (அவ்வாறு) வைக்க வேண்டிய அவசியம் இருப்பதில்லை. ஆனால் இந்த முழக்கம், இந்த வார்த்தைகள் இதயத்தில் இடம்பெற்றிருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இவ்வாறு இருப்பதில்லை. நீங்கள் மக்களின் முன் வைப்பதற்க்கு நேர்மாற்றமாக இதயம் கூறுகின்றது. இந்த [நற்செயல்களை] மக்களிடம் காண்பிப்பதற்காகவும், அவர்களை திருப்திப் படுத்துவதற்காகவும் செய்யாதீர்கள், ஆனால் உங்களை படைத்தவனை மகிழ்விப்பதற்காக, அல்லாஹ்வுக்காக மட்டுமே நல்ல செயல்களைச் செய்யுங்கள், அப்போதுதான் அல்லாஹ்(ஸுப்ஹா) அவன் தேர்ந்தெடுத்தவரின் வருகையின் மூலம் நீங்கள் அல்லாஹ்வின் ஆன்மீக அருளைப் பெறக்கூடியவர்களாக உங்களுக்கு வெகுமதி அளிப்பான், மேலும் உங்களைத் தூய்மைப்படுத்த ஆன்மீக மழை வானத்திலிருந்து இறங்கும். இன்ஷா அல்லாஹ்.

நேரம் இல்லாததால், இந்தச் சொற்பொழிவின் தலைப்பை அடுத்த வாரமும் தொடருவேன். இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் முஸ்லிம்களின் இதயங்களைத் திறந்து இந்தச் செய்தியைப் புரிந்து கொள்ளவைப்பானாக! இன்ஷா-அல்லாஹ், ஆமீன்

ஹிஜாப் மற்றும் இஸ்லாமிய விரோதபோக்கு(இஸ்லாமோபோபியா)


இந்தியாவிலும், மற்ற பல்வேறு நாடுகளிலும் மிகக் குறிப்பாகவும், இரக்கமின்றியும் பிரான்ஸ் நாட்டிலும் பள்ளிக்கூடங்களில் உள்ள சிறுமிகளும், பெண்களும் ஹிஜாபைக் கடைப்பிடிப்பது குறித்துக் கடுமையான விவாதம் நடைபெற்று வருகிறது. பெரும்பான்மை யானவர்கள், ஹிஜாப் (முக்காடு) அணிவது பொதுப் பள்ளிக் கூடங்களின் கொள்கைக்கு முரணானதாக, அதாவது அரசு நிதியுதவி-(பெறும்)பள்ளிகள் மதம் சம்பந்தமான விஷயத்தில் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதாகத் தோன்றுகிறது.

கலீஃபத்துல்லாஹ் என்ற நிலையில், ஒரு முஸ்லீம் மாணவி தலையின் மேல் அணியும் "முக்காடு" போன்ற ஒரு சிறிய விஷயத்திற்காக ஏன் இவ்வளவு பரபரப்பு என்பது எனக்குப் புரியவில்லை.

முஸ்லீம்களும் [அந்தந்த நாடுகளின்] மாநில நிதிகளுக்கு விகிதாச்சார அளவில் வரிச் செலுத்தி உள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! என் கருத்துப்படி, பள்ளி வழக்கத்தை சீர்குலைக்கவோ அல்லது ஒழுக்கத்திற்கு அச்சுறுத்தலாகவோ இல்லாதவரை பள்ளிகள் மாணவர்களின் மத நம்பிக்கைகள் மற்றும் நடை முறைகளை மதிக்க வேண்டும். இருப்பினும், நாம் பிரான்ஸை உதாரணமாகப் பார்த்தால், அதிகரித்து வரும் வேலையின்மையை அவர்கள் வெளிப்படையாக எதிர்கொண்டனர், இன்னும் அரபுத் தொழிலாளர்களின் குடியேற்றம் பற்றி அவர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்ந்தனர். மேலும் அவர்களின் நகரங்களிலும், பள்ளிகளிலும் ஹிஜாபின் காட்சியானது அவர்களின் பாதுகாப்பின்மை உணர்வை அதிகப்படுத்தியது.

அந்த பாதுகாப்பின்மையானது இஸ்லாத்தின் மீது ஒரு கடினமான அச்சமாக உருமாறியது, இதை நாம் இஸ்லாமிய விரோதப் போக்கு(இஸ்லாமோஃபோபியா) என்று அழைக்கிறோம் - (இது) உலக மக்கள் தொகையின் அங்கமாக இருக்கின்ற முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரின் இதயத்திலும் அச்சத்தையும் பாதுகாப் பின்மையையும் உருவாக்குவதற்க்கு இஸ்லாத்தின் எதிரிகளால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடுக் கையாளப்படும் சூழ்ச்சி முறையாகும். இஸ்லாம் குறித்த இந்த அச்சம் மற்றும் பாதுகாப்பற்ற நிலை‌யானது, அதாவது இஸ்லாமோஃபோபியா என்பது அவர்களின் (அதாவது எதிரிகளின்) பணியை நிறைவேற்றுவதற்காக செயல்படுத்தப்பட்டுவருகின்றது. பல கன்னியாஸ்திரிகள் மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் தலையில் முக்காடு அணிந்துள்ளனர், என்ற உண்மையை இவர்கள் அலட்சியம் செய்கிறார்கள், இது ஒரு சிறிய கூற்று வேறொன்றும் இல்லை, ஆனாலும் அவர்கள் தலையில் முக்காடு அணிகிறார்கள், (அதற்காக)
அவர்களிடம் எதுவும் பேசப்படுவதோ அல்லது அவர்கள் அச்சப்படுவதோ இல்லை என்ற நிலையில் இருக்கிறோம். புடவை அணிந்த ஒரு பெண், கண்ணியமாகவும், கலாச்சாரமாகவும் இருக்க முயற்சி செய்து தனதுச் சேலையைக் கொண்டு அவளதுத் தலையை மூடிக்கொண்டால், அவர்களைப் பற்றி எதுவும் கூறப்படுவதில்லை. ஆனால் முஸ்லீம் சிறுமிகள் மற்றும் பெண்கள் தங்கள் உடலை அந்நியர்களின் பார்வைகளிலிருந்தும் பாதுகாக்க முயற்சிக்கும் போது, சுதந்திரமற்றவர்கள், கைதிகள், அறிவற்றவர்கள் மற்றும் தாழ்வு மனப்பான்மை கொண்ட பாலினங்கள் என்று அவர்கள் முத்திரைக் குத்தப்படுகிறார்கள்.

பிரான்சிலும் அதேப் போன்று சிறிது சிறிதாக மற்ற நாடுகளிலும் (ஹிஜாப்) தடை செய்யப்பட்டதில் இருந்து. அரபு சமூகங்களில் மேற்கத்திய மதச்சார்பின்மை வேரூன்றுவதால் அது (ஹிஜாப்) மறைந்துவிடும் என்பது பல அரேபியர்கள் மற்றும் அரபி அல்லாதவர்கள் ஆகியோரின் எதிர்பார்ப்புகளாக இருந்தபோதிலும், அரபு நாடுகளில் உள்ள அதிகமதிகமான இளம் வயதினர் மற்றும் உள்ளூர் முஸ்லிம்களும் ஹிஜாப் அணிகிறார்கள்.

அதிகமதிகமான முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பின்பற்ற விரும்பும் இஸ்லாமிய நடைமுறைகளின் அத்தகைய ஒரு மறுமலர்ச்சியானது - முஸ்லிம்களால் தங்களின் பெருமை மற்றும் அடையாளத்தை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாகவேப் பெரும்பாலும் கருதப்படுகிறது. இவை இரண்டும் குடியேற்றக் கோட்பாடு ஆதிக்கத்தால் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானில், இதை பழமைவாதப் பாரம்பரியமாக அல்லது மேற்கத்திய எதிர்ப்பு உணர்வின் விளைவாகக் கண்டுகொண்டுப் புரிந்துக் கொள்ளப்பட்டது, மெய்ஜி சகாப்தத்தின் போது மேற்கத்திய கலாச்சாரத்துடனான முதல் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஜப்பானியர்கள் தாங்களே அனுபவித்த ஒன்றாகும்; அவர்களும் பாரம்பரியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மேற்கத்திய உடைக்கு எதிராக எதிர்வினையாற்றினர் (செயல்பட்டனர்). தங்கள் வழிகளில் பழமைவாதமாக இருக்க வேண்டும் என்றும் புதியது மற்றும் அறிமுகமில்லாத எதையும் அது நல்லதா அல்லது கெட்டதா என்று பார்க்க கூட நேரம் ஒதுக்காமல் அதற்கு எதிராக செயல்படும் மனப்பான்மை மக்களில் உள்ளது. நல்லதாக இருக்கும் மாற்றங்கள் இருப்பதைப் போன்றே தீயதாக இருக்கக் கூடிய மாற்றங்களும் உள்ளன.

மேற்கத்திய உணர்வுகளைப் பொறுத்தவரை, முஸ்லீம் பெண்கள் பாரம்பரியத்திற்கு அந்தளவுக்கு அடிமையாக இருக்கின்ற காரணத்தால்(தான்) அவர்கள் ஹிஜாப் அணிகிறார்கள் என்ற உணர்வுகள் முஸ்லிம் அல்லாதவர்களிடையே இன்னும் நீடிக்கின்றன, அதனால் அது அடக்குமுறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. பெண்களின் விடுதலை மற்றும் சுதந்திரம் என்பது, அவர்கள் முதலில் ஹிஜாபை அகற்றாத வரை சாத்தியமற்றது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கானக் காரணம் பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது. இஸ்லாத்தைப் பற்றிய அறிவு சிறிதளவு அல்லது கொஞ்சமும் இல்லாத முஸ்லிம் பெயர் தாங்கிகளால் இத்தகைய ஒரு ஞானமின்மை பகிரப்படுகிறது. அவர்கள் நம்புகிறார்கள். இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கானக் காரணம் பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது. இஸ்லாத்தைப் பற்றிய அறிவு சிறிதளவு அல்லது கொஞ்சமும் இல்லாத முஸ்லிம் பெயர் தாங்கிகளால் இத்தகைய ஒரு ஞானமின்மை பகிரப்படுகிறது. அவர்கள் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்களாக இருக்கிறார்கள்.

மதச்சார்பின்மைக்கு மிகவும் பழக்கப்பட்டவர்களாய் இருந்துக் கொண்டு, மதம் குறித்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கான நடைமுறையை (அங்கும் இங்குமாக) [குறிப்பாக முஸ்லிம் பெயர் தாங்கிகள் உட்பட தங்களின் அசல் போதனைகளை கைவிட்டுவிட்ட இஸ்லாத்தைத் தவிர மற்ற அனைத்து மதங்களில் இருந்தும்] எடுத்துக் கலந்து கொண்டவர்களால், இஸ்லாம் உலகளாவியதும், நிலையானதுமாகும் என்பதை அவர்களால் [நவீனகால முஸ்லீம்களில் பெயருக்கு மட்டும் முஸ்லிம்களாக இருப்பவர்களால்] புரிந்துக் கொள்ள முடியவில்லை. இவை தவிர, அரேபியர்கள் அல்லாத உலகெங்கிலும் உள்ள பெண்கள், இஸ்லாத்தைத் தழுவி 'பாரம்பரியம்' என்று தவறாக வழிநடத்தப்பட்ட உணர்வினால் அல்லாமல் மார்க்கத் தேவைக்காக ஹிஜாப் அணிகிறார்கள். பெண்களுக்கான ஹிஜாப் என்பது அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதன் அடையாளமும் இறைநம்பிக்கையின் வெளிப்பாடும் ஆகும்.

ஹிஜாப் மற்றவர்களுக்கும் அந்தந்த பெண்களுக்கும் தாங்கள் சொந்த உடல்களில் பாதுகாப்பாக இருப்பதைக் [நன்மையான மற்றும் பாதுகாப்பான உணர்தலை] காட்டுகிறது மேலும் அது [அதாவது. ஹிஜாப் மற்றும் முழுமையான இஸ்லாமிய ஃபர்தா என்பது] உலகத்தில் உள்ள அனைத்துத் துன்பங்களுக்கும் எதிராக ஒரு பெண் மற்றும் சிறுமி தங்களைத் தாங்களே இறை பாதுகாப்பின் கீழ் வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதற்கான ஒரு உறுதிமொழியாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்று நாம் என்ன பார்க்கிறோம்? தங்கள் அழகை வெளிப்படுத்துகின்ற வெட்கமில்லாத பெண்களைப் போல் அந்தப் பெண்களும் சிறுமிகளும் அவர்களின் ஹிஜாபைக் கழற்றி தங்கள் அழகை வெளிப்படுத்திக்காட்டிடக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்த ஹிஜாப் அணிவது முற்றிலும் தன்னார்வமானது என்ற உண்மையை முஸ்லிமல்லாதவர்கள் அங்கீகரிக்கவில்லை. மேலும் இது ஒரு பெண் இறைக் கட்டளைகளுக்கு அடிபணிதலுக்கான ஓர் அடையாளமாகும். ஏனெனில் முஸ்லீமாக இருப்பதன் பொருள் என்னவென்றால் நீங்கள் உங்களை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முழுமையாக சமர்ப்பித்தல் என்பதாகும். ஒரு பெண்ணை ஹிஜாப் அணிய எவராலும் கட்டாயப்படுத்த முடியாது. ஒரு பெண் உண்மையான நம்பிக்கையாளராக இருந்தால் இந்த நடைமுறையை செயல்படுத்துவது என்பது பெண் அவளிடமிருந்து (தானாகவே) வர வேண்டும். அவள் அல்லாஹ்வின் கட்டளைகளைப் பின்பற்றவில்லை என்றால், அவள் அல்லாஹ்வின் முன் அதற்காகப் பதிலளிக்க வேண்டும்.

ஒரு ஹதீஸின் கூற்றுப்படி: "எந்த ஒரு பெண் தனது உடையை தன்னுடைய சொந்த வீட்டில் அல்லாமல் வேறொரு வீட்டில் கழற்றுவாளோ, அல்லாஹ்வும் தன்னுடைய பாதுகாப்பின் திரையை அவளிடமிருந்து விலக்கிக் கொள்கிறான்." (அஹ்மத், அல்-ஹகீம், தபரானி, பைஹகி).

அல்லாஹ் பெண்களை ஒழுங்காக, கண்ணியமான முறையில் உடை அணியுமாறும் மேலும் அவளது அழகை [அதாவது, அவளுடைய உடல் அங்கங்களை] வெளிப்படுத்தக் கூடாது என்றும் கட்டளையிடுகிறான். இதனால், இஸ்லாமிய ஃபர்தாவின் பாதுகாப்பில், அவர்கள் தங்களது தீனை நடைமுறைபடுத்தவும் மேலும் கண்ணியமான முறையில் சமுதாயத்தில் வேலை செய்ய [இயல் வதற்கும்] [தங்களின் கணவர்கள் மற்றும் வீடு/குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதற்காக அவர்கள் எப்போதாவது வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்] அவர்கள் சுதந்திரமாகவும் இருக்கிறார்கள். இவ்வாறு, இந்த கண்ணியமான உடை மற்றும் அவர்களது நன்னடத்தையின் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் அழகை வெளிப்படுத்திக்காட்டுகிறார்கள்.

பொதுவாக ஹிஜாப் மற்றும் இஸ்லாமிய ஃபர்தா என்பது, அல்லாஹ்வின் இருப்பின் யதார்த்தத்திற்கு சாட்சியாகவும் அதனை அங்கீகரிக்கவும் மக்களுக்கு உதவுகிறது, மேலும் இந்த நடைமுறையை விதித்தவன் அல்லாஹ்வே. இதன் பின் விளைவுகளுக்கு அஞ்சாமல் அந்த இறை கட்டளைகளை பின்பற்றும் அனைத்து முஸ்லீம் பெண்களையும், சிறுமிகளையும் அல்லாஹ் அவனே பாதுகாப்பான். ஏனெனில் முதன்மையாக அல்லாஹ்வின் திருப்திக்காகவும் தங்கள் சுய மானத்தை [ஹயா] காப்பாற்றிக் கொள்ளவும் அவர்கள் இதனைச் செய்கிறார்கள்.

நமது நேசத்திற்குரிய ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஒரு முறை தன் மகள் ஹஸ்ரத் பாத்திமா (ரலி) அவர்களிடம் "பெண்களுக்கு சிறந்தது எது?" என்று கேட்டார்கள். அதற்கு அன்னார் (ரலி) அவர்கள் "ஆண்களைப் பார்க்கக் கூடாது, (ஆண்கள்) அவர்களால் பார்க்கப்படவும் கூடாது" என்று பதிலளித்தார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இந்தப் பதிலை கேட்டு மகிழ்ச்சி அடைந்து "நீ உண்மையிலேயே என் மகள் ஆவாய்" எனக் கூறினார்கள்.

ஒரு பெண் வீட்டிலேயே இருப்பதும், அந்நிய ஆண்களுடன் தொடர்புக் கொள்வதை முடிந்தவரைத் தவிர்ப்பதும் அவளுக்கு சிறந்தது என்பதை இது காட்டுகிறது. ஒரு முஸ்லீம் பெண் தன் கணவனின் தனிப்பட்ட உடைமை என்பதால் தன்னை மறைத்துக் கொள்கிறாள் என்று நினைப்பது சிந்தனையில் ஏற்பட்டத் தவறாகும். உண்மையில், அவள் தனதுக் கண்ணியத்தை பாதுகாத்திடவும் எந்த அந்நியர்களாலும் ஆக்கிரமிக்கப்படுவதையும் மறுக்கிறாள் என்பதாகும்.

அது முஸ்லீமல்லாத பெண்கள் (மற்றும் இஸ்லாத்தின் போதனைகளை விட்டும் வெளியேறிய விடுதலைப் பெற்ற (வர்களாய் கருதிக் கொள்ளும்) முஸ்லிம் பெண்கள்) தங்களின் தனிப்பட்ட அழகுகளை அனைவரும் பார்க்கும் வகையில் வெளிப்படுத்தியதற்காக (உண்மையில்) பரிதாபப்பட வேண்டும்.

வெளியில் இருந்து ஹிஜாபைக் கவனிக்கும் போது, ​​அது மறைத்து வைத்திருப்பதைப் பார்ப்பது சாத்தியமற்றதாகும். வெளியே இருந்துக் கொண்டு உள்ளேப் பார்ப்பதற்கும், உள்ளே இருந்துக் கொண்டு வெளியேப் பார்ப்பதற்கும் இடையேயான இடைவெளியானது, இஸ்லாம் பற்றிய புரிதலில் உள்ள வெற்றிடத்தை ஓரளவு விளக்குகிறது. ஒரு வெளிநபர்/ அந்நியர் இஸ்லாம் முஸ்லிம் சிறுமிகளையும், பெண்களையும் கட்டுப்படுத்துவதாக ஒரு வெளிநபர்/ அந்நியர் கருதலாம். இருப்பினும், அதை [அதாவது. ஹிஜாபை] அனுபவிப்பவர்கள் அது அவள் இஸ்லாத்தில் பிறந்த ஒரு முஸ்லீம் சிறுமியாகவோ அல்லது அல்லாஹ்வால் வழிநடத்தப்பட்ட பிறகு அதாவது அல்லாஹ் அவர்களின் இதயங்களைத் திறந்த பிறகு இஸ்லாத்திற்குத் திரும்பும் பெண்களாக இருந்தாலும் சரி அவர்களுக்குள்ளே அமைதி, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவை உள்ளன. எனவே அவர்கள், தாமே இஸ்லாத்தை உண்மையாகவும் முழுமையாகவும் தேர்ந்தெடுத்து, மேற்கத்திய நாடுகள் பெண்களுக்காகவும் அவர்கள் சமூகத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் [அவர்கள் தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்]

என்பதற்காகவும் கண்டுபிடித்த 'பெயர் தாங்கிய சுதந்திரத்திற்கு' அடிபணிய அவர்கள் மறுக்கிறார்கள். மேற்கத்தியம் முன்வைத்துள்ள சுதந்திரத்தின் உருவமானது வெறும் ஒரு மாயையாகும். உண்மையான சுதந்திரம், விடுதலை என்பது ஆன்மீகத்தில், இறைக் கட்டளைகளை பின்பற்றி அந்நியர்களின் உலகில் கண்ணியமான விதத்தில் உங்களைத் தற்காத்துக்கொள்வதில்தான் காணப்படுகிறது.

ஹிஜாப் உண்மையிலேயே பெண்களுக்கு எதிரான அடக்குமுறையின் அடையாளமாக இருந்திருந்தால், ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் உலகின் பிறப் பகுதிகளில் உள்ள அதிகமானப் படித்த பெண்பிள்ளைகளும், பெண்களும் இந்த பெயர் தாங்கிய "சுதந்திரம்" மற்றும் "விடுதலை" என்று அழைக்கப்படுவதைக் கைவிட்டு விட்டு ஏன் இஸ்லாத்தைத் தழுவுகின்றார்கள்?

பல முஸ்லிமல்லாதவர்கள் மற்றும் சில முஸ்லிம்களுக்கு மத்தியில், ஹிஜாப் அல்லது இஸ்லாமிய முக்காடு, பெண்களை அடிமைத்தனத்தில் வைத்திருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற ஒரு தவறான கருத்து உள்ளது. "தனிமை" மற்றும் "பிரித்தல்" என்பது முக்காடின் சூழலில் பயன்படுத்தப்படும் சிலச் சொற்கள் ஆகும், அவை முஸ்லீம் பெண்களை ஆண் அந்நியர்களின் பார்வையில் இருந்து திரையிட்டு பாதுப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது.

இஸ்லாம் பெண்களை ஆண்களின் அடிமைத்தனத்திற்குள் வைத்து பராமரிக்கவில்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். மாறாக, இஸ்லாமிய ஃபர்தா அவளை விடுவித்தது. சில சமூகங்களில் முன்பு பெண்களுக்கு மறுக்கப்பட்ட வாரிசுரிமைத் தொடர்பான இஸ்லாமியச் சட்டங்கள் தொடர்பாக அவர் ஓர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார், எனவே இஸ்லாமிய நெறிமுறைகளின்படி, ஒரு பெண்ணுக்கு செல்வம் / சொத்துக்கள் மற்றும் சமூகத்தின் கட்டமைத்தல் மற்றும் பரிணாம வளர்ச்சியில் தனது கருத்துக்களையும் யோசனைகளையும் வழங்கவும் முழு உரிமை உள்ளது. மேலும் அவள் சமூகத்திலிருந்தும் பாதுகாக்கப்படுவதற்காக அல்லாஹ் அவளை அடக்கத்தின் மூலம் பேணி நடக்குமாறு அறிவுறுத்தியுள்ளான்.

இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு உட்பட்ட சமூகத்தின், மற்றும் அவளைக் கடைப்பிடிக்க, சமூகத்திலிருந்து அவளைப் பாதுகாக்க அல்லாஹ் அவளுக்கு அறிவுறுத்திய அடக்கத்தின் மூலம். இவ்வாறு அல்லாஹ் அவளை இஸ்லாத்தில் ஆயத்தப்படுத்தியுள்ளான், அதனால் அவள் தனது தீனைப் பாதுகாப்பாக கடைப்பிடிக்க சுதந்திரமாக இருக்கிறாள், மேலும் இஸ்லாம் அவளது அனைத்து முஸ்லிம் உரிமைகளையும் பாதுகாக்கிறது. ஆக, இஸ்லாத்தின் பாதையிலும், பெண்ணின் உரிமைகளிலும், இஸ்லாம் பெண்ணுக்கு வகுத்துள்ள கண்ணியத்தின் வரம்புகளை மதிக்கும் வரை, ஹிஜாப் ஒரு பெண்ணுக்குத் தடையாக இருக்காது. முக்காடு (ஹிஜாப்) அடக்கத்துடன் ஒத்துப்போகிறது, முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது: "அடக்கமும் நம்பிக்கையும் ஒன்றோடு ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளன, (இவற்றில்) ஒன்று உயர்த்தப்பட்டால், மற்றொன்றும் உயர்த்தப்படும்." (அல்-ஹகீம்)

முக்காடு (ஹிஜாப்) மற்றும் - ஒரு பொதுவான விதியாக - இஸ்லாமிய ஃபர்தா அல்லாஹ்வுக்கும் அவனது நபிக்கும் கீழ்ப்படிவதைப் பிரதிபலிக்கிறது.

திருக்குர்ஆன் கூறுகிறது:

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ ۗ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا

"அல்லாஹ்வும் அவனது தூதரும்(ஏதாவது) ஒன்றில் தீர்ப்பு வழங்கி விட்டால், (அதன் பின்னர்) நம்பிக்கைக் கொண்ட எந்த ஆணுக்கும், நம்பிக்கைக் கொண்ட எந்தப் பெண்ணுக்கும், தங்கள் பிரச்சினைக்குத் தங்கள் விருப்பத்திற்கேற்பத் தீர்ப்பளிப்பதற்கு உரிமையில்லை. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுபடாதவர், நிச்சயமாக மிகத் தெளிவான வழிகேட்டில் சென்று விடுகின்றார். (அல் அஹ்ஸாப் 33: 37)

ஆன்மீகத்தில் தங்கள் சுதந்திரத்தை/ விடுதலையைத் தேடுகின்ற அனைத்துப் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் அல்லாஹ் உதவிப் புரிவானாக! மேலும் அவனது கட்டளைகளை (எழுத்துக்கு எழுத்து) அதன் சொற்பொருளின் படி பின்பற்றவும் இவ்வுலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் நல்லொழுக்கத்தின் முன்மாதிரியாக ஆவதற்கும் அல்லாஹ் உதவி செய்வானாக. அல்லாஹ் இந்த உலகத்தில் சமாதானத்தை நிலைநாட்டுவானாக. இதைச் செயல்படுத்த, முதலில் நமக்குள் அமைதி இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதுமாகும், இந்த அமைதியானது நம் வீடுகளிலும், குடும்பங்களிலும் சுற்றுப்புறங்களிலும், நாம் வாழுகின்ற சமூகத்திலும் உலகத்திலும் பரவுகிறது. உலகில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு, அல்லாஹ் உதவி செய்வானாக!, அல்லாஹ்வால் அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்பட்டு இஸ்லாத்தை அழிப்பதற்கு, வன்முறையின் மூலம் கட்டுப்படுத்தி உலகில் இஸ்லாமிய விரோதப் போக்கை (இஸ்லாமோஃபோபியாவை) வலுப்படுத்த கொடுங்கோலர்கள் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களால் முடிந்த அளவு அவர்கள் முயற்சி செய்யட்டும். ஆனால் இன்ஷா அல்லாஹ், ஆன்மீகப் புரட்சியின் அலை வெடித்துக்கிளம்பும் (கிளர்ந்தெழும்). அங்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இஸ்லாத்தின் உண்மைத் தன்மையை அங்கீகரித்து (ஒப்புக்கொண்டு) இஸ்லாத்தை அவர்களின் அன்றாட வழக்கமாக [அவர்களின் வாழ்க்கை/வாழும் முறையாக] நடைமுறைப்படுத் வார்களாக! இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் இஸ்லாத்தை வலுப்படுத்தி முஸ்லிம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உதவுவானாக! அதனால் ஒன்றாக நாம் வெற்றி பெறலாம், அது வன்முறையைத் தொடர்ந்து அமைதியின் வெற்றியாகவும், வெறுப்பை தொடர்ந்து அன்பின் வெற்றியாகவும் ஆகட்டுமாக!. இன்ஷா அல்லாஹ், ஆமீன்

Saturday, 18 June 2022

உம்மத்தின் நோய்கள் (பகுதி-2)

10 ஜூன் 2022 / 09 துல் கஹ்தா 1443 

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹது, தவூத் மற்றும் சூரா அல் ஃபாத்திஹா ஓதியப் பிறகு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் உம்மத்தின் நோய்கள் (பகுதி-2) என்ற தலைப்பில் தனது ஜும்மா பேரூரையை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ். ஸும்ம அல்ஹம்துலில்லாஹ். தற்போதைய‌ காலகட்டத்தில் இஸ்லாத்தை பாதிக்கின்ற காரணங்கள் மற்றும் தற்போதைய சூழ்நிலையில் ஒரு மாற்றத்தைத் தூண்டுவதற்கு முன்னெடுக்கப்படும் தீர்வுகள் குறித்துத் தொடர்ந்து எனது வெள்ளிக்கிழமை சொற்பொழிவை வழங்கும் தவ்ஃபீக்கை எனக்கு அளித்துள்ளான். இன்ஷா அல்லாஹ் படிப் படியாக நான் இந்தத் தலைப்பின் பக்கம் வருவேன்.

நான் கடந்த வெள்ளிக்கிழமை உங்கள் முன் மேற்கோள் காட்டியதைப் போன்றே அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

"இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, நிராகரிப்பாளராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள். இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்". (அல் மாயிதா 5: 79-80)

நமது தேசத்திற்குரிய நபி(ஸல்) அவர்கள் இந்த குர்ஆனிய வசனங்கள் குறித்து மேலும் விவரங்களை வழங்கி, அவற்றின் மீதான விளக்கத்தின் ஒளியை [i.e. புரிந்துணர்வை] வழங்கி யுள்ளார்கள் :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி) அறிவித்தார்கள்:

இஸ்ரவேல் சந்ததியினரைப் பாதித்த (மார்க்கத்தின்) வழியிலான முதல் குறைபாடானது, (அவர்களில் ஒரு) மனிதர் இன்னொருவரைச் சந்தித்து அவரிடம் கூறுவதாவது:

‘அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதிலிருந்தும் விலகி இருங்கள், ஏனெனில் இது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல!பின்னர் அவர் மறுநாள் அவரைச் சந்திப்பார், அவரிடத்தில் எந்த மாற்றமும் இருப்பதில்லை,ஆயினும் இது அவருடன் (ஒன்றாக)உண்பதையும், அவருடன் குடிப்பதையும், அவருடைய சபைகளில் அமர்வதையும் தடுப்பதில்லை.இந்த நிலை வரும்போது, அப்படிப் பட்டவர்களுடன் அவர்கள் இணைந்ததன் காரணமாக அல்லாஹ் அவர்களின் இதயங்களை தீய வழிகளின் பக்கம் கொண்டு சென்றான்'.

அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் இதனை ஓதினார்கள்:

"இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, நிராகரிப்பாளராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள். இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்.

இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும். (நபியே!) அவர்களில் அநேகர் காஃபிர்களையே உற்ற நண்பர்களாகக் கொண்டிருப்பதை நீர் காண்பீர். அவர்கள் தமக்காக முற்கூட்டியே அனுப்பிவைத்தது நிச்சயமாக கெட்டதேயாகும். ஏனெனில் அல்லாஹ்வின் கோபம் அவர்கள் மீதுள்ளது. மேலும் வேதனையில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீதும் நபியின் மீதும், அவர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால், அவர்கள், காஃபிர்களைத் (தங்களின்) உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்கமாட்டார்கள். ஆனால் அவர்களில் அநேகர் பாவிகளாகவே இருக்கின்றனர்." (அல் மாயிதா 5: 79-82)

அதன் பிறகு ஹஜ்ரத் முஹம்மது நபி (ஸல்) தொடர்ந்தார்கள்:

“அவ்வாறன்று! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து, அநீதி இழைப்பவரின் கையைத் தடுத்து அவர் நியாயமாகச் செயல்படுமாறு வற்புறுத்தவும், உண்மையைக் கடைப்பிடிப்பதற்கும் நீங்கள் சுமத்தப் படுகிறீர்கள் (வழி நடத்தப்படுகிறீர்கள்)

அல்லது அல்லாஹ் உங்களில் சிலரது உள்ளங்களை மற்ற(தீய)வர்களின் இதயங்களுடன் இணைத்து அவர்களை சபித்தது போல் உங்களையும் சபித்துவிடுவான்”. (அபூதாவூத், திர்மிதி)

[ஹஸ்ரத் ஜரீர்] கூறியதாக ஹஸ்ரத் ஜரீரின் மகனிடமிருந்துள்ள அறிவிப்பாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(குற்றமிழைப்பவர்களைத் தடுக்கும் ஆற்றலும், திறனும் கொண்ட மக்களாக) அவர்கள் வலுவாகவும்,ஓர் உயர்ந்த அந்தஸ்துடனும், அவர்கள் தம்மை மாற்றிக் கொள்ளாதவர்களாகவும் இருக்கின்றவரை, பாவங்களைச் செய்தவர்களாகமாட்டார்கள், ஆனால், (அந்நிலையில்) அல்லாஹ் அவர்கள் அனைவர் மீதும் தண்டனையை இறக்கியதாக எந்த சமுதாயமும் இல்லை'' (இப்னு மாஜா)

ஹஜ்ரத் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "கலிமா - லா இலாஹ இல்லல்லாஹ் - இதனை யார் ஓது கின்றார்களோ அவர்களுக்கு நன்மை பயக்கும்.மேலும் அவர்கள் எதுவரை அதன் உரிமைகளைப் புறக்கணிக்காமல் இருக்கின்றார்களோ அது வரையில் துன்பங்கள் மற்றும் துரதிர்ஷ்டங்களில் இருந்தும் அவர்கள் பாதுகாக்கப்படுகின்றார்கள்".

ஸஹாபாக்கள் (ரலி) வினவினார்கள்: "அதன் உரிமைகளைப் புறக்கணித்தல்" என்பதன் பொருள் என்ன?" (அதற்கு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: “பாவங்கள் வெளிப்படையாகச் செய்யப்படும் போது, அவர்கள் அதனை ​​தடுத்து நிறுத்த மாட்டார்கள்,அவர்களை (பாவங்கள் செய்வதிலிருந்தும்) தடை செய்ய மாட்டார்கள்".

ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அன்னாரது அருளுக்குரிய முகத்துடன் வந்தார்கள். ஏதோ மோசமான சம்பவம் நிகழ்ந்ததுள்ளது என்பதை உணர்ந்தேன். அன்னார் எதனையும் கூறவில்லை.ஒளு செய்துவிட்டு நேராக பள்ளி வாயிலுக்கு சென்றார்கள்.நானும் கூட அன்னார் என்ன கூறுவார்கள் என்பதைக் கேட்பதற்காக பள்ளி வாயிலின் சுவர் அருகே நின்றேன். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தும் மேடையின் மீது நின்று, அல்லாஹ்வைப் புகழ்ந்த பிறகு கூறினார்கள்:

"ஓ முஸ்லிம்களே! நன்மையை ஏவுமாறும், தீமையைத் தடுக்குமாறும் அல்லாஹ் உங்களுக்கு விதித்துள்ளான், அவ்வாறு இல்லையென்றால், ஒரு காலம் வரும் (அப்போது) நீங்கள் பிரார்த்திக்கும்போது [அவனை அழைப்பீர்கள்] ஆனால் அவன் [உங்கள் பிரார்த்தனைகளுக்கு] பதிலளிக்க மாட்டான், நீங்கள் அவனிடம் ஓர் ஆதரவைக் கேட்பீர்கள், (ஆனால்) அவன் அதனை உங்களுக்கு வழங்க மாட்டான், நீங்கள் அவனிடம் உதவியைக் கேட்பீர்கள், (ஆனால்), அவன் [உங்களுக்கு அந்த உதவியை செய்ய] மறுத்து விடுவான்".

ஹஸ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எப்போது எனது உம்மத் இந்த உலகத்திற்கு [மறு உலகை விட] முன்னுரிமை கொடுக்கத் தொடங்குமோ, மேலும், அதனை கண்ணியத்திற்க்குரிய அடிப்படை ஆதாரமாகக் கருதத் தொடங்குவார்களோ, [அப்போது] [அல்லாஹ்வின் மீதான] அச்சமும், மற்றும் இஸ்லாத்தின் மீதான மதிப்பு [முக்கியத்துவமும்] அவர்களின் இதயங்களிலிருந்து மறைந்து போய்விடும். அவர்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதை விட்டுவிடும்போது, ​​அவர்கள் இறைவெளிப்பாட்டின் அருள்களை இழந்துவிடுவார்கள், மேலும் அவர்கள் ஒருவரையொருவர் விமர்சிக்கத் தொடங்கும்போது, ​​அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் இருந்து வீழ்ந்து விடுவார்கள்.”

இந்த பிரச்சினையின் (ஆணி)வேர் (எது?)

நான் உங்கள் முன் வைத்த ஹதீஸ்களில் இருந்து “அம்ர் பில் மரூஃப் வ நஹி அனில் முன்கர்” (நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தலாகிய) இந்தப் பணியை [மக்கள் மீது - முஸ்லிம்கள் மீது] கொண்டு வந்ததன் முதல் காரணம் கோபம், அதிருப்தி மற்றும் இறுதியில் அல்லாஹ்வின் சாபம் ஆகும். மேலும் உம்மத்-ஏ- முஹம்மதியாவைப் பொறுத்தவரை, முஸ்லிம்கள் இந்தப் பணியை புறக்கணித்தால் அல்லது விட்டுவிட்டால், அவர்கள் அனுபவிக்கும் தண்டனை கடந்த கால சமூகங்களைக் காட்டிலும் மிகக் கடுமையானதாக இருக்கும். ஏனென்றால், அவர்கள் தங்கள் முதல் கடமையை அங்கீகரிக்கத் தவறிவிட்டனர் என்பதாலும், அவர்களது வாழ்க்கையின் ஒரேப் பணியை புறக்கணித்து விட்டனர் என்ற காரணத்தினாலும் ஆகும்.

இந்த காரணத்திற்காகவே, ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் "அம்ர் பில் மரூஃப் வ நஹி அனில் முன்கர்" என்ற இந்தச் செயலை "தீன்-இ-இஸ்லாத்தின் அடிப்படையான மற்றும் மிகக் குறிப்பான அடையாளமாகும்" என்று கட்டளையிட்டு (அடிப்படைத்) தகுதியுடையதாக ஆக்கினார்கள். மேலும், இந்த பணியை விட்டுவிடுவது இஸ்லாத்தின் தரகுறைவையும், மறைவையும் ஏற்படுத்தி விடும்.

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில் இவ்வாறுக் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் எவர் ஒருவர் ஒரு தீமையைக் கண்டாலும் அவர் கண்டிப்பாக அதனைத் தனது கைகளால் தடுக்கவேண்டும் வேண்டும் (மாற்ற); அவரால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால், அவரது நாவால் தடுக்க வேண்டும்; அவரால் அதனையும் செய்ய முடியவில்லை என்றால், பிறகு அவரது உள்ளத்தால் தடுக்க வேண்டும் (வெறுத்து விட ஒதுக்கி விட வேண்டும்); அதுவே ஈமானின் - நம்பிக்கையின் கடைசி நிலையாகும்." (முஸ்லிம்)

இந்த ஹதீஸின் விரிவான பதிவு ஒன்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸூத்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: எனக்கு முன் அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களுக்கும், தோழர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த நபியினுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்தத் தோழர்கள் செய்யாததை செய்ததாகச் சொல்வார்கள், அவர்களுக்கு ஏவப்படாததையெல்லாம் செய்வார்கள். எவனொருவன் தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ அவன் மூமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான். எவன் தனது உள்ளத்தால் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான். இதன் பின்னர், ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது”, (முஸ்லிம்)

"அம்ர் பில் மரூஃப் வ நஹி அனில் முன்கர்" (நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்) என்ற பணியானது இஸ்லாத்தின் அதே வலுவானத் தூணாகும், அதன் மீதே ஈமானின் (இறை நம்பிக்கையின்) ஒவ்வொரு கிளையும் தாங்கி நிற்கிறது என்பதில் சந்தேகமில்லை. நிச்சயமாக, அனைத்து நபிமார்கள் (அலைஹிமுஸ்ஸலாம்) அவர்களும் இந்த பணிக்காகவே அல்லாஹ்வால் (தபாரக) அனுப்பப்பட்டார்கள்.

துரதிர்ஷ்டம் காரணமாக, நாம் இந்த பணியைப் புறக்கணித்து விட்டால், அதனை நாம் மறந்து விட்டால், அதை நாம் செய்வதை நிறுத்திவிட்டால், நுபுவ்வத்தின் (நபித்துவத்தின்) உண்மையான நோக்கம் சிதைந்து போய் அதன் அர்த்தத்தை இழந்துவிடும் என்று நாம் கூறலாம். இந்த சூழலில் தான் மனிதனின் முதல் செல்வமாக நாம் கருதக்கூடிய மனசாட்சியானது கெட்டுப்போய் சீரழிந்துவிடும். மனம் கணத்துப்போய் இருளாகிவிடும். பாவம் மற்றும் ஆணவத்தின் கதவு திறக்கப்பட்டு உலகம் முழுவதிலும் மக்கள் காட்டுமிராண்டிகளாக ஆகிவிடுவார்கள். மனிதனின் எந்தக் கண்டுபிடிப்பும் ஆபத்தானதாக மாறுவதுடன், அது அவனுக்கே தீங்கைக் கொண்டு வந்து விடும்.

மனிதனிடையே உள்ள உறவு ஒழுக்க ரீதியாக தாழ்ந்துப் போய்விடும். ஆனால், மனிதன் இவை அனைத்தையும் தீர்ப்பு நாளில், அல்லாஹ்வின் முன் தோன்றி அவன் தனது செயல்களுக்காகக் கணக்குக் கொடுக்கக் கூடிய நாளில் உணர்ந்து கொள்வான். இது நிறைவேறக்கூடியதும், நாம் அஞ்சக்கூடியதுமான ஒரு பெரும் துரதிஷ்டமாகும். மேலும், இது நமது கண் முன்னே அனைத்து எல்லா உண்மையுடடனும் பௌதீகமாக உருப்பெற்று விடும். (அந்நாளில் வெளிப்படையாகக் காட்சி அளிக்கும்)

அல்லாஹ் திருக் குர்ஆனில் கூறுகிறான்: இன்னும் அல்லாஹ்வின் கட்டளையானது தீர்மானிக்கப்பட்ட விதியாகும். (அல் அஹ்ஜாப் 33:39)

நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்”(அல்-பகரா 2:157).

அறிவு மற்றும் வழிகாட்டலின் கட்டுமானங்கள் தகர்க்கப்பட்டுள்ளன; நன்மை மற்றும் இந்த அறிவின் பலன் முற்றிலுமாக மறைந்து போய்விட்டது. இதன் விளைவாக, வெறுப்பு மற்றும் அவமதிப்பு எல்லா இடங்களிலும் படையெடுத்துவிட்டன. மனிதனுக்கும் அவனது படைப்பாளனுக்கும் இடையே உள்ள உன்னதமான மற்றும் நெருக்கமான உறவானது இப்போது இதயத்தில் இல்லை; மாறாக, மனிதர்கள், விலங்குகளைப் போலவே, ஆசைகளுக்கு அடிமையாகிவிட்டனர். நிச்சயமாக இன்றைய உலகில், முஸ்லீம்கள் அரிதாகவே இருக்கிறார்கள். இஸ்லாத்தைப் பரப்புவதற்காக தவிர்க்க முடியாத தியாகங்களை தாங்கிக் கொள்ள தயாராக இருப்பவர்களை கண்டுபிடிப்பது நடைமுறையில் சாத்தியமற்றதாக உள்ளது.

தீன் - இஸ்லாம் மார்க்கம் படுகொலை செய்யப்பட்டு கீழே வீசி எறியப் ப்படக்கூடிய இந்த தற்போதைய நிலையை மாற்ற தைரியமாக நிற்கும் எந்த முஸ்லிமும், தீனை பரப்புவதற்காக நபித்துவத்தின் நடைமுறையை (சுன்னத்தை) உயிர்ப்பிக்க அவர் தன்னால் முடிந்த அளவுக்கு அனைத்தையும் செய்து அவர் இந்த பொறுப்பை அவரது தோள்களில் ஏற்றுக் கொள்வதற்கு எப்போதும் ஒரு படி முன்னோக்கி இருக்கிறார் என்றால் அவர் நிச்சயமாக எல்லா மக்களிலும் மிகவும் உன்னதமான மற்றும் புகழ்பெற்றவராக கருதப்படுவார்.

இன்று, அல்லாஹ் தனது அடியார்களின் மீது கருணை காட்டி உங்கள் துன்பத்தைப் புரிந்துகொண்டு, அவனது தீனை புதுப்பித்து இஸ்லாத்தை மீண்டும் உங்கள் இதயங்களில் கொண்டு வர அவனது கலீஃபத்துல்லாஹ்வை உங்களிடையே அனுப்பியிருக்கிறான் என்பதால் நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் ஆவீர்கள். இந்த பணியில் அல்லாஹ்வுக்கு அவனது எளிய அடியானுக்கு உதவி செய்ய நேர்மையான இதயத்துடன் எவர் முன் வருவாரோ, அவர் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி ஆவார். மேலும், அவருக்கு அல்லாஹ்விடமிருந்து மகத்தான கூலி கிடைக்கும். அல்லாஹ்வின் தூதருடைய காலம் [வரலாற்றின் ஒரு (சிறப்பு மிகு) காலம்] இது அனைவருக்கும் வழங்கப்படுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்!.

எனவே, நபி கரீம் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா(ஸல்) அவர்களின் பரிபூரணமான மற்றும் கீழ்ப்படிதலுள்ள தொண்டனாக இருக்கின்ற அல்லாஹ்வின் நபியை- தூதரை எவர்கள் அடையாளம் கண்டு உறுதியாக நம்பிக்கை கொண்டு (அவருக்கு) கட்டுப்படுவார்களோ, பின்னர் உலகில் அல்லாஹ்வின் ஒளியை உலகில் பரப்பும் மனத் திறனை அந்த மனிதரும் பெற்றுக்கொள்வார். இன்னும் "அம்ர் பில் மரூஃப் வ நஹி அனில் முன்கர்" (நன்மையை ஏவுதல் தீமைகளைத் தடுத்தல்) என்ற இப்பணியை செய்யும் ஆற்றலையும் அவர் பெற்றுக்கொள்வார்.

உலகம் துயரம் மிகுந்த வேதனையில் இருந்து கொண்டிருக்கக் கூடிய இதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை நிதானமாக சிந்தனை செய்ய நாம் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நாட்களில் பரவி வரும் சோம்பேறித்தனம் மற்றும் அலட்சியத்திற்குப் பின்னால் மிகத் தெளிவான காரணங்கள் உள்ளன. இன்ஷா அல்லாஹ், அடுத்த வெள்ளிக்கிழமை எனது குத்பாவில் நான் இந்த காரணங்களைப் பற்றி கூறுவேன்.

மனிதனின் முயற்சியும், உறுதியான நம்பிக்கையும் இன்றி, அல்லாஹ் அவனது மூச்சுக் காற்றை [அதாவது இறைவனின் ஆவியில் உள்ள உயிரை] மனிதனின் வாழ்வின் மீது வைக்க மாட்டான் என்பதை மனிதன் உணர்ந்து கொள்ள வேண்டும். மனிதனிடம் அல்லாஹ் எதிர்பார்க்கக் கூடிய அல்லாஹ்வின் அற்புதங்களின் தெளிவான சான்றை காண்பதற்காக மனிதன் முயற்சி செய்ய வேண்டும். அல்லாஹ்வின் பாதையில் அவர் முயற்சி செய்யும் போது, அல்லாஹ் அவருடன் இருக்கிறான் என்பதற்கான அடையாளங்களை அவர் காண்பார் மேலும் தாவத்-இ- இல்லல்லாஹ் - வின் அது பற்றிக் கூறுவதென்றால் மற்ற மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தலின் பணியை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் அடையும்போது அவர் அல்லாஹ்வின் ஆதரவைப் பெறுவார்.

அல்லாஹ்வின் தூதரின் காலகட்டத்தில், நமது தற்போதைய காலத்தைப் போன்றே, இந்த தூதர்- சீர்திருத்தவாதியின் உண்மையான ஸஹாபிகள் அவரையும், அவரது குறிக் கோள் - பணியையும் உறுதியாக நம்புகின்றார்கள். இந்த பணியில் அவருக்கு உதவ அவர்கள் எதையும் செய்யத் தயாராக உள்ளனர், மேலும் அவரது பணியிலும், அல்லாஹ்வின் தூதராகிய, அவனது கலீபத்துல்லாஹ்விற்கு மேலிருந்து இறங்கும் வெளிப்பாடுகளிலும் அவர்களுக்கு எந்த சந்தேகமும் இருப்பதில்லை. அதன் பிறகு,

அப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ் அத்தகைய வழிகளைத் திறக்கிறான், அதனால் அவர்களும் "நன்மை செய்தல் [ஏவுதல்] தீமைகளைத் தடுப்பது" என்ற தங்களது பணியைச் செய்யும் திறனைப் பெற்றுக் கொள்வார்கள். மேலும் இந்த பணியில் அவர் தடுமாறாமல் இருந்தால், அல்லாஹ் இந்த வகையான நபரைப் பற்றி மகிழ்ச்சியடைவான். ஏனென்றால், ஒரு சிறிய தவறு (கூட) அவரது நம்பிக்கையை இழக்கச் செய்து விடும்.

ஆகவே, ஓர் உண்மையான முஃமின் உறுதியாகவும், நேர்மையாகவும் இருந்து, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து, காலம் கனியும் போது, ​​அல்லாஹ் அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் அவனது அருளின் கதவைத் திறந்து விடுவான்.

இன்ஷா அல்லாஹ், ஆமீன்.

Friday, 17 June 2022

முஹையுத்தீன் அல் கலீஃபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்களின் தூதுச்செய்தி!

இறை வெளிப்பாடுகள், அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கைகள்:

எனது அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! குழந்தைகளே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ 

(சாந்தி, கருணை மற்றும் இறைவனின் அருள்கள் உங்கள் மீது நிலவட்டுமாக!) அல்ஹம்துலில்லாஹ்! மார்ச் 08, 2020 அன்று லுஹர் மற்றும் அஸர் தொழுகைக்குப் பின்னர், என்னைப் படைத்த ரப்புல் ஆலமீனிடம் பல்வேறு துஆக்களை செய்த பிறகு,
அல்லாஹ் (தபாரக்) எனக்கு பல இறை வெளிப்பாடுகளை வழங்கினான். இந்த வஹீகள் என்னை துன்பத்திற்குள்ளாக்கிய பல கடினமான சோதனைகளுக்கும், (அதன் காரணமாக) என்னுடைய உடல்நலம் பாதிப்படைந்ததற்குப் பிறகு வெளிப்படுத்தப்பட்டன; அவற்றை எல்லாம் நினைத்து, என் கண்களில் கண்ணீர் மல்க, நான் அல்லாஹ்வை வேண்டி அவனுடைய ஒப்பற்ற (அசாதாரணமான) உதவியை நாடினேன். பிறகு நான் ஒரு பலவீனமான நிலையில் வீழ்ந்து விட்டேன். இந்த நிலையில்தான், அல்ஹம்துலில்லாஹ் ஸும்ம அல்ஹம்துலில்லாஹ், சர்வ வல்லமை மிக்க இறைவன், ஓர் அசாதாரணமான வாசனையை வெளிப்படுத்தி அதன் மூலம் சமஸ்கிருதத்தில் வார்த்தைகளை வெளிப்படுத்தி எனக்கு உள தைரியத்தை வழங்கினான். இந்த நறுமணம் வெளிப்பட்ட பொழுது, நான் புகைப்படலத்தையும் கண்டேன். அதன் பிறகு தான், இந்த வெளிப்பாடுகள்

சமஸ்கிருதத்தில் என் மீது இறங்கியது:

"யவத் ஸ்தஸ்யந்தி ஜிராயா சரிதாஷ் சா மஹிதலே தவாத் ராவத் பகவான்கதா லோகேஷு ப்ரச்சரிஷ்யதி."

பூமியின் மீது மலைகளும் ஏரிகளும் இருக்கின்ற வரை, சர்வவல்லமையுள்ள இறைவன் இந்த உலகத்தில்அவனது ஒளியை அனுப்புவான்.

அஸதோ மா ஸத் கமாயா, தமாஸோ மா ஜ்யோதிர் கமாயா, மிரித்யர்ம அம்ரிதம் கமாயா.

உண்மையற்றவற்றிலிருந்து என்னை சத்தியத்தின் பக்கம் வழிநடத்துவாயாக! இருளில் இருந்து ஒளியின் பக்கம் வழிநடத்துவாயாக!! மரணத்திலிருந்து என்னை நித்தியதின் (முடிவில்லா வாழ்வின்) பக்கம் வழிநடத்துவாயாக!

பின்னர், அல்லாஹ் எனக்கு (இவ்வாறு) வெளிப்படுத்தினான்:

“அல்லாஹ்(அவனே எந்தத்) துணையும் இன்றி அவனது கலீஃபாவைத் தேர்வுசெய்கிறான். அது மனித கரங்களால் அல்ல. இது அல்லாஹ்வின் அருளாகும்; (அது) அதற்கு தகுதியானவருக்கு உரியதாகும். அல்லாஹ் (தபாரக்வதாலாவால்) தேர்ந்தெடுக்கபட்ட கலீஃபா உயிர் கொடுப்பவர் (ஆன்மீக) ஆவார். எனவே இதில் எந்த சந்தேகமும் எழ வாய்ப்பில்லை."

"மனிதர்களின் கைகள் செய்த செயல்களின் காரணத்தால் கடலிலும் நிலத்திலும் குழப்பம் தோன்றியுள்ளது. (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்களின் செயல்களுல் சிலவற்றை அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். (திருக் குர்ஆன் 30:42)

சமஸ்கிருதத்தில் என் மீது இறங்கியது:

"யவத் ஸ்தஸ்யந்தி ஜிராயா சரிதாஷ் சா மஹிதலே தவாத் ராவத் பகவான்கதா லோகேஷு ப்ரச்சரிஷ்யதி."

பூமியின் மீது மலைகளும் ஏரிகளும் இருக்கின்ற வரை, சர்வவல்லமையுள்ள இறைவன் இந்த உலகத்தில்அவனது ஒளியை அனுப்புவான்.

அஸதோ மா ஸத் கமாயா, தமாஸோ மா ஜ்யோதிர் கமாயா, மிரித்யர்ம அம்ரிதம் கமாயா.

உண்மையற்றவற்றிலிருந்து என்னை சத்தியத்தின் பக்கம் வழிநடத்துவாயாக! இருளில் இருந்து ஒளியின் பக்கம் வழிநடத்துவாயாக!! மரணத்திலிருந்து என்னை நித்தியதின் (முடிவில்லா வாழ்வின்) பக்கம் வழிநடத்துவாயாக!

பின்னர், அல்லாஹ் எனக்கு (இவ்வாறு) வெளிப்படுத்தினான்:

“அல்லாஹ்(அவனே எந்தத்) துணையும் இன்றி அவனது கலீஃபாவைத் தேர்வுசெய்கிறான். அது மனித கரங்களால் அல்ல. இது அல்லாஹ்வின் அருளாகும்; (அது) அதற்கு தகுதியானவருக்கு உரியதாகும். அல்லாஹ் (தபாரக்வதாலாவால்) தேர்ந்தெடுக்கபட்ட கலீஃபா உயிர் கொடுப்பவர் (ஆன்மீக) ஆவார். எனவே இதில் எந்த சந்தேகமும் எழ வாய்ப்பில்லை."

"மனிதர்களின் கைகள் செய்த செயல்களின் காரணத்தால் கடலிலும் நிலத்திலும் குழப்பம் தோன்றியுள்ளது. (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்களின் செயல்களுல் சிலவற்றை அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். (திருக் குர்ஆன் 30:42)

"கொரோனா வைரஸ்"

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தின் போது 'மனிதகுலம் ஆபத்தில் உள்ளது.' அதனால் மனிதகுலத்தின் மீது பொதுவாக ஒரு கொடிய வைரஸ்(கிருமி) விழும் (அதாவது தாக்கும்) என்று அல்லாஹ் (சுப்ஹான) பல முறை (எனக்கு) வெளிப்படுத்தினான். 2002 முதல் 2003 ஆம் ஆண்டு வரை, மனிதகுலத்தையும் அதுவும் குறிப்பாக நம்பிக்கையாளர்களை எவர்கள் துன்புறுத்தினார்களோ அவர்களை எச்சரிக்க மீண்டும் மீண்டும் ஃகலீஃபத்துல்லாஹ்விற்கு (அதாவது இந்த எளிய அடியானுக்கு) இறைவெளிப்பாடு வந்தது. இன்று நாம் அறிந்த (இவ்)உலகம் முந்தைய நூற்றாண்டின் உலகத்திலிருந்தும் மிகவும் வேறுபட்டுள்ளது. உலகம் எல்லாத் துறைகளிலும் முறையாக வளர்ச்சி அடைந்ததுடன் இறைவனின் திருப்திக்கு வழிவகுக்கும் பாதையிலிருந்தும் மக்கள் விலகிச் சென்றுவிட்டார்கள். அவர்கள் தூய்மை மற்றும் நல்லொழுக்கத்தின் வரம்புகளை மீறிவிட்டார்கள். புனிதப்படுத்தப்பட்டுள்ள சட்டங்களை முறித்துவிட்டார்கள். மேலும், இவ்வுலக பொருட்களின் மீது இந்நாள் வரை மிகுந்த நேசத்துடனும், தற்பெருமையுடனும் சுய திருப்தியுடனும் கூடியதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்துமே அவனது பார்வையின் கீழ் இறைக் கட்டளைகளைப் புறக்கணிப்பதன் மூலமும், பெருங் கொடுமையான செயல்களைச் [அதாவது கடுமையான குற்றங்களைச்] செய்வதன் மூலமும், ஒரு வெளிப்படையான கிளர்ச்சி மற்றும் வெட்கமில்லாத இழிசெயல்களினால் அவனை புண்படுத்தியதன் காரணத்தினாலேயே ஆகும்.

மக்களின் பெளதீக மற்றும் மார்க்க நல்வாழ்வை நெறிப்படுத்துவதற்காக இறைவன் அனுப்புகின்ற அவனது (வழிகாட்டும்) தலைவர்களுக்குக் கீழ்ப்படியாதவர்கள் மீது இறைவனின் பழிவாங்குதல் (தகுந்த தண்டனை) விதிக்கப் படுகின்றது. இந்த மக்கள் கிளர்ச்சி செய்வதோடு கட்டளைகளையும் தகர்த்து (பயனற்றதாக்கி) விடுகின்றார்கள். அவர்கள் சட்டவிரோதம், அநீதி மற்றும் கர்வத்துடன் செயல்படுவதன் மூலம் எதிர்ப்பு மற்றும் விரோதத்தைக் கொண்டு முன்னேற்றத்தை தடுத்துவிடுகின்றார்கள். அவ்வாறு செயல்படும் போது இறைவனால் நிறுவப்பட்டுள்ள தொடர்பையும் துண்டித்து விடுகின்றார்கள். சர்வ வல்லமையுடையவனின் எல்லையற்ற ஞானத்துடன் கொண்டு வந்துள்ளவற்றை நிராகரித்துவிடுகின்றார்கள்.

ஒவ்வொரு நூற்றாண்டின் தொடக்கத்திலும் அவனது உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தத் தெளிவானதும் அசைக்க முடியாததுமான வாதங்களுடன் தோன்றக் கூடிய இறைத்தூதரை நிராகரிப்பவர்களின் மீது இறைவனின் கோபம் விழுகிறது. அவர்கள் அவருடைய அடையாளங்களை தங்களது சொந்த குறைமதி மனப்பான்மையைக் கொண்டு மறுக்கின்றார்கள்; அவர்கள் அவரை அவமதிக்கிறார்கள்; அவரை தண்டிக்கிறார்கள்; அவரை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். அவரை மார்க்கத்தின் எதிரி என்று அறிவிக்கிறார்கள். இன்னும் அவரது கொலை செய்ய கூட திட்டமிடுகிறார்கள்.

உலகின் பல பெரிய நாடுகளையும், மிக சக்திவாய்ந்த நாடுகளையும் தங்களது முழங்கால்களுக்குக் (கீழ்) கொண்டு வந்திருக்கின்ற, இறைவனின் கோபத்திற்க்கு முன் உதவியற்றதாக்கியுள்ள அத்தகையதொரு வைரஸ்(கிருமி) தான் கொரோனா வைரஸ் ஆகும். உலகில் சக்திவாய்ந்தவர்கள் என்று வாதம் செய்பவர்களே! நீங்கள் பூமியில் தெய்வங்கள் என்று கூறிக்கொள்பவர்களே! மீண்டும் சிந்தித்துக்கொள்ளுங்கள்! நீங்கள் உண்மையிலேயே சக்திவாய்ந்தவர்கள் என்றால், ஏன் இவ்வளவு பயம் (உங்களுக்கு)? பள்ளிக்கூடங்கள், கிடங்குகள், பல்பொருள் அங்காடிகள், கடைகள் மற்றும் அலுவலகங்களை ஏன் மூடுகின்றீர்கள்? உங்களையே நீங்கள் சக்தி வாய்ந்தவர்களாகவும் செல்வச் செழிப்புடையவர்களாகவும் கருதுகிறீர்கள் என்றால் ஏன் இவ்வளவு பயம்? சர்வதேச விமான நிறுவனங்களின் முன்பதிவுகள் இப்போது குறைந்துவிட்டது. ஒரு குறிப்பிட்ட பயம் நிலவுகின்றது. முன் பதிவுகள் (எல்லாம்) கீழே குறைந்து வருகின்றது. மக்கள் பயணம் செய்வதற்கு முன்பே தயங்கு கின்றார்கள். மேலும், சிலர் தங்கள் பயணங்களை தாமதப்படுத்த விரும்புகின்றார்கள்.

பல நாடுகளில் கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும், சீனா, இத்தாலி இன்னும் மற்ற பல நாடுகளிலும் இறப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனா வைரஸ் தங்களது நாடுகளில் ஏற்படுத்திய இறப்புக்களின் எண்ணிக்கையை குறித்த உண்மையை வெளிப்படுத்தாத அரசாங் கங்களைக் கொண்ட நாடுகளும் உள்ளன. உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நபரின், ஒவ்வொரு குடும்பத்தின் ஒவ்வொரு நாட்டின்(சிறிய,பெரிய நாடுகள், மற்றும் தீவுகளிலும் கூட அனைவரது) உள்ளத்திலும் ஒரு பயம் (உண்டாகி) உள்ளது.

பல்வேறு நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா வைரஸ் என்ற ஒரு கொள்ளை நோயை சர்வ வல்லமையுள்ள இறைவன் அனுப்பியுள்ளான். இந்த வைரஸ் அதனுள் எந்த வித அனுதாப உணர்வும் கருணையும் முழுமையாக இல்லாத நிலையில் வந்துள்ளது. (இது ஏனென்றால்) மக்கள் தங்கள் சக மனிதர்களின் சடலங்களை உண்ணக்கூடிய மிருகங்களாக மாறிவிட்டார்கள். மேலும் எந்த சமூக வேறுபாட்டையும் அங்கீகரிக்கவில்லை (என்பதாலும்).

எனவே, மனிதகுலம் அனைவரிடமும் நான் போகின்றேன்! கொரோனா வைரஸ் நிலை நாட்டப்பட்டுள்ளதையும், உலகம் முழுவதும் பரவி வருவதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்! அதன் கடுமையான தாக்குதல்கள் நிச்சயமாக உங்கள் அன்புக்குரியவர்களையும் விடவில்லை. மேலும், அவை உங்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த சோதனையை உங்கள் மீது சுமத்தியிருப்பதன் மூலம் கருணையாளாளனும், ஞானம் மிக்கவனுமாகிய இறைவன், உங்களை கடும் சோதனைக்கு உட்படுத்தி கோபத்துடனும் பழிவாங்குதலுடனும் உங்களை சந்தித்துள்ளான்.

ஒரு இறைத்தூதரின் (வாழ்)நாட்களில் கொடிய தொற்றுநோய் தூய குர்ஆனிலும் (27:83) அதே போன்று பைபிளிலும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்! எடுத்துக்காட்டாக ஜகரியா (14:12), மத்தேயு (24:7). இந்த முன்னறிவிப்புகளின் உண்மைத் தன்மையை எவராலும் மறுத்துரைக்க முடியாது; அதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எந்தவொரு உலகியல் வழிமுறைகளின் உதவியையும் நாடாமலிருப்பது எனக்கும், அதே போன்று எனது உண்மையான ஸஹாபிகளுக்கும் கடமையாகும்.

கொரோனா வைரஸ் அல்லது வேறு ஏதேனும் நோய் ஏற்பட்டால்,(அதற்கு) மருந்து அல்லது தடுப்பு முறைகளைப் பயன்படுத்துவது சட்ட விரோதமானது என்று நான் அறிவிக்கவில்லை. இறைவனால் பரிகாரம் வழங்கப்படாத எந்த நோயும் இல்லை என்றே இஸ்லாத்தின் பரிசுத்த தூதர் எம்பெருமானார் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால், இறைவன் எனக்கும் எனது உண்மையான சஹாபாக்களுக்கும் கொடுத்திருக்கும் இந்த வானத்தின் அடையாளத்தை தடுப்பூசி மூலம் மறைப்பதை நான் பாவமாக கருதுகிறேன். இதன் மூலம் என்னை உண்மையாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு அவனால் தேர்ந்தெடுத்தற்குரிய தயவை (உதவியைக்) காட்ட அவன் விரும்புகின்றான். எனவே தடுப்பூசிக்கு அடிபணிவதன் மூலம் இறை கருணையின் இந்த அடையாளத்தை அவமதிக்கவும், இழிவுபடுத்தவும் என்னால் முடியாது. மேலும், அதனால் இறைவனின் வாக்குறுதியில் நம்பிக்கையற்ற குற்றவாளியாக இருப்பீர்கள்.

பொதுவாகவே இந்த கொள்ளை நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் கொள்கை என்பதை நான் அறிவேன். அதன் காரணமாக, தடுப்பூசியைக் காட்டிலும் சிறந்த தீர்வை அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்கள். இதைக் கருத்தில் கொண்டால், எனது (இந்த) முடிவானது அரசாங்க நடவடிக்கைக்கு முரண்பட்டதல்ல (என்பதைப் புரிந்துகொள்ள முடியும்). எனது சமதாயத்தைச் சார்ந்த மக்கள், இறை வெளிப்பாடுகளின் மீது உளப்பூர்வமான நம்பிக்கை வைத்திருப்பவர்கள், இந்நூற்றாண்டின் இறை அடியானாகிய இந்த எளியவன் மீது உண்மையான நம்பிக்கை வைத்திருப்பவர்கள், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட (இந்த) அடியானுக்கு எதிராக வெளியில் பேசாதவர்கள், எனக்கு எதிராக சண்டையிடாமல் எனக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பவர்களாகிய இவர்களனைவரும், அவர்களது எண்ணிக்கை எவ்வளவு இருப்பினும் அவர்கள் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருப்பார்கள் என எல்லாம் வல்ல இறைவன் இறைவெளிப்பாட்டின் மூலம் எனக்கு அறிவித்துள்ளான். இன்ஷாஅல்லாஹ் இறைவனின் உதவியுடன் எனது உண்மையான அடியார்கள் இந்த கொரோனா வைரஸுக்கு எதிராக பாதுகாக்கப்படுவார்கள்.

நான் சொல்வதை கேட்டு சிலர் ஏளனமாக சிரித்தாலோ, இன்னும் பிறர் என்னை பைத்தியம் என்று அழைத்தாலோ, என்னை ஏளனம் செய்தாலோ அந்நபரை அவன் தண்டிப்பான் என்றும், ஏற்கனவே எழுச்சியடைந்துள்ள அவனது கோபம் அவரை அழித்துவிடும் என்றும் அல்லாஹ்(ஸுபஹ்) எனக்கு வெளிப்படுத் தியுள்ளான். பல உயிர்கள் அழிக்கப்படும். ஆனால், அவன் என்னிடத்தில் கூறினான்;

“என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியானே! உம்மை உண்மையாக ஏற்றுக் கொண்டவர்களுக்காக, உமது இதயத்தை வருத்திக் கொள்ளாதீர்!அவர்கள் காப்பாற்றப்படுவார்கள்! அவர்கள் நிம்மதியாக வாழ்வார்கள்! குற்ற வாளிகள் பாதுகாப்பாக உள்ளனர் என்று எண்ணிவிட வேண்டாம் [இறைவனின் ஏகத்துவத்தின் மீதான நம்பிக்கையின் காரணமாக நம்பிக்கை யாளர்களை துன்புறுத்திய குற்றவாளிகள்]. நாம் அவர்களின் வீடுகளை நெருங்கி வருகிறோம். கொரோனா வைரஸின் நுண்ணுயிர் கொல்லியைப் பன்மடங்காக்கி எனது படைகளைத் தயார் செய்கிறேன். "மக்கள் இறந்து போன விலங்குகளைப் போல் தங்களது வீடுகளில் உயிரற்றவர்களாகக் காணப்படுவார்கள். அது இறைவனின் வெற்றிக்குரிய நாளாக இருக்கும்”.

அல்லாஹ்(ஸுபுஹ்) தொடர்ந்து கூறினான் நானே இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதல் [2001 ஆம் ஆண்டு முதல்] உம்முடைய சோதனைகளை அப்புறப்படுத்தியக் கருணையாளனாவேன், நிச்சயமாக நானே உம்மை ஃகலீஃபதுல்லாஹ்வாக, முஹைய்யுத்தீனாக உயர்த்தினேன். நிச்சயமாக, எனது தூதர்கள் என் இருப்பைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். நானே உமதுப் பாதுகாவலனாவேன்; மேலும் நானே உமக்கு ஆதரவும் வழங்குவேன். நானே உம்மை அனுப்பினேன், நீர் எனது உண்மையை உலகிற்கு நிரூபித்தீர். உலகம் உம்மைப் புகழ்ந்து போற்றும் அளவிற்கு, நான் உம்மை ஒரு மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் நேரம் வரும். உமது கண்ணீரை சிந்த வேண்டாம், ஏனென்றால் இந்த கண்ணீர் உமது எதிரிகளை மூழ்கடிக்கும் வெள்ளமாக மாறிவிடும். உமக்கு சிரமங்களை கொடுத்தவர்கள் [அதாவது: உமக்கு சீர்குலைவை ஏற்படுத்தியவர்களையும்] உமது முடிவை காண விரும்பிய நபர்கள், இந்த மக்களை நான் கவனித்துக் கொள்வேன். உமது நம்பிக்கையை என்னிடத்தில் மட்டுமே வைப்பீராக! உலக சோதனைகள் தொடரும், ஆனால் மறந்துவிடாதீர்! மேலும் உறுதிப்படுத்திக் கொள்வீராக எனது கலீஃபதுல்லாஹ்வே! அது (என்னவென்றால்)வெற்றி உம்மிடமும், தோல்வி உமது எதிரிகளிடமுமே உள்ளது! இந்த நாளின் வெளிப்பாட்டிற்காக பொறுமையுடன் காத்திருப்பீராக! இது உம்மைப் படைத்தவனிடமிருந்துள்ள (இறை) வெளிப்பாடாகும்”.

மனிதகுலமே! மக்கள் இறைவனின் தூதரை (அவனுடைய ஃகலீஃபத்துல்லாஹ்வை) ஏற்றுக் கொண்டால் அல்லது அவர்கள் அவருக்கு எந்தத் தீங்கும் செய்யாமலிருந்தால், அவர்களுக்கு ஆன்மீக அருள் வழங்கப்படும் என்று சர்வவல்லமையுள்ள இறைவன் எனக்கு வெளிப்படுத்தியுள்ளான். உண்மை என்னவென்றால் இறைவனால் அனுப்ப்பட்ட நபியை நிராகரிப்பதால் இப்பூமியில் கடுமையான தண்டணை ஏற்பட்டுவிடாது. மறுபுறம், வரம்பு மீறுதல்கள், பழிச்சொற்கள் மற்றும் துன்புறுத்தல்கள் போன்றவை இந்த பூமியை மரணத்தைக் கொண்டும் அழிவைக் கொண்டும் தண்டித்துவிடுகின்றன. எல்லா தீய செயல்களுக்காகவும் மக்கள் இப்போது மனந்திரும்பினால், இறைவன் இந்த கொடிய தொற்று நோயான: கொரோனா வைரஸை அகற்றிவிடுவான்.

ஆகவே, இறைவனின் எல்லையற்ற கருணையின் மூலம் அவன் நம்மையும் நமது நண்பர்களையும் இந்த கொடிய தீங்கிலிருந்து பாதுகாக்கும்படி நாம் துஆ செய்ய வேண்டும். ஆனால் ஞானமுள்ளவர்களாலும் தொலை நோக்குடையவர்களாலும் மட்டுமே (இதனைப்) புரிந்து கொள்ள முடியும். எனவே இறைவனுக்குப் பயந்து, சீர்குலைவையும், அழிவையும் கொண்டுவருகின்ற செயல்களிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். எனது பணியில் அலட்சியமாக இருந்ததாக நான் குற்றஞ்சாட்டப்படாமல் இருக்க அதனை மீண்டும் உங்களிடம் கூறுவது எனது கடமையாகும்.

தன்னலமற்ற தன்மை, பிரார்த்தனை மற்றும் தானதர்மத்துடன் இந்த தீமையிலிருந்து ஈடேற்றத்தைத் தேடுங்கள். இறைவன் உங்கள் குறைகளை மன்னித்து உங்களை (தீங்கிலிருந்தும்)விடுவிப்பான். உங்கள் குறைபாடு களிலிருந்தும் விடுபட்டு, நீங்கள் பிறகு ஆன்மீக அருளுக்கும் சாட்சியமளிப்பீர்கள். இறை வார்த்தையின் தூண்டுதல்களால் நான் உங்களிடம் பேசியிருக்கின்றேன், எனது வார்த்தைகளின் உண்மைக்கு நீங்கள் விரைவிலேயே சான்றளிப்பீர்கள்.

நான் உங்களிடம் கூறியதுபோல், இறைவெளிப்பாட்டின் ஆரம்ப(கால)த்தில், கொடிய தொற்று நோய் குறித்து அல்லாஹ்(ஸுப்ஹ) மீண்டும் மீண்டும் எனக்கு வெளிப்படுத்தினான். ஆனால், முகந்திருப்பி இந்த வெளிப்பாடுகளின் உண்மைத்தன்மையை அங்கீகரிக்காதவர்களுக்கு அந்தோ பரிதாபமே! இந்த இறை வார்த்தைகளை பழைய கட்டுக்கதைகளாக ஆக்கியவர்கள் மீதும் பரிதாபமே!! அல்ஹம்துலில்லாஹ், "நான் இந்தியாவுக்கான பயணத்தின் போது, இன்னும் துல்லியமாக கூறுவதென்றால், கேரளாவின் நூருல் இஸ்லாம் பள்ளி வாசலில் வைத்து, ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தின் அனைத்து நம்பிக்கையாளர்களுக்கும் முன்பாக, அல்லாஹ்(ஸுபஹ்) மற்ற சில விஷயங்களுடன் இவ்வுலகை அழிக்கும் பேரழிவுகள் பற்றி மாண்டரின் மொழியில் எனக்கு வெளிப்படுத்தினான்."

இறைவன் நமக்காக கட்டளையிட்டதைத் தவிர வேறு எதுவும் நமக்கு நடந்து விடமுடியாது." அவனே நம்முடைய அரசனும் நமது பாதுகாவலனும் ஆவான். இறைவன் மட்டுமே நமது நம்பிக்கைக்கு தகுதியானவனாவான். எனவே ஒரே இறைவனும், தனித்துவமான இறைவனுமாகிய அந்த இறைவன் மீதே உங்களது நம்பிக்கையை வைத்துவிடுங்கள். இறைவன் நாடினால், நீங்கள் உங்களை அவனுக்கு அர்ப்பணித்துவிட்டால், அனைத்துமே செயல்பட தொடங்கிவிடும். ஆகவே, “ஃபஸ்பிர் ஸப்ரன் ஜமீலா.”–அழகியப் பொறுமையை மேற்கொள்ளுங்கள். இன்ஷா- அல்லாஹ்.

அல்ஹம்துலில்லாஹ், நமது ஜமாத் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகள் ஆகின்றன (10 மார்ச் 2008-2020), நாளை மொரீஷியஸ் தனது 52 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கின்றது(மேலும் 28 ஆண்டுகால குடியரசு). நாம் ஒவ்வொருவரும் அவரவர் தாய்நாட்டிற்காக துஆ செய்வோம், மேலும் அல்லாஹ் தனது அடையாளங்களின் உண்மை மற்றும் அவனது ஏகத்துவத்தின் பக்கம் மக்களின் உள்ளங்களைத் திறப்பானாக! மேலும் அவன் எப்போதும் தனது நிழலின் கீழ் நம்மைப் பாதுகாப்பானாக! ஆமீன்! ஸும்ம ஆமீன்!

கவனித்து கேட்டமைக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி! அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு.

Friday, 10 June 2022

உம்மத்தின் நோய்கள் (ஜும்ஆ உரை)

03 ஜூன் 2022 / 02 துல் கஹ்தா 1443ஹி

உலகெங்கிலும் உள்ள அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) தனது ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹுது, தவ்வூத் மற்றும் சூரா அல் பாத்திஹா ஓதிய பிறகு; ஹஸ்ரத் முஹையுத்தீன் கலீஃபத்துல்லாஹ்(அய்தஹு) அவர்கள் உம்மத்தின் நோய்கள் (பகுதி-1) என்ற தலைப்பில் தனது ஜும்மா பேரூரையை நிகழ்த்தினார்கள்.

சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, அறியாமை, பாவம் மற்றும் ஒழுக்கக்கேட்டின் இருளில் உலகம் மூழ்கி இருந்த போது, உண்மையான அறிவு மற்றும் வழிகாட்டுதலின் ஒளி (மக்காவைச் சுற்றியுள்ள சிறிய மலைகளான) பத்தாவின் பாறை மலைகளுக்கு மத்தியில் அடிவானத்தில் தோன்றியது. அதன் கதிர்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கிலும் பரவியது. அவை பூமியின் ஒவ்வொரு மூலையையும் ஒளிரச் செய்துள்ளன; குறுகிய காலத்தில் [இருபத்தி- மூன்று வருடங்களில்], இந்த ஒளி மனிதன் முன்னர் ஒருபோதும் அடைந்திராத உயர்ந்த பதவிகளை அடைவதற்கு வழி வகுத்துள்ளது. இது முஸ்லிம்களை மூட நம்பிக்கையிலிருந்து அகற்றி உண்மையான பாதையைப் பின்பற்றுவதற்கான ஆழ்ந்த விருப்பத்தை அவர்களில் உருவாக்கியது. இந்த ஒளியால் வழி நடத்தப்பட்டு, முஸ்லிம்கள் வெற்றிக்கு மேல் வெற்றியை அடைந்தார்கள். மேலும் அவர்கள் வரலாற்றில் மிக உயர்ந்த கௌரவம் மிக்க பதவியை வந்தடைந்தனர்.

பல நூற்றாண்டுகளாக அவர்கள் மகத்துவத்துடனும், அதிகாரத்துடனும் உலகை ஆண்டனர்; அந்த நேரத்தில் வாழ்ந்த எந்த தலைவனுக்கும் (அவர்களை) எதிர்க்கும் தைரியம் இருந்ததில்லை; எப்போதாவது எந்த ஆட்சியாளராவது அவ்வாறு செய்யத் துணிந்தார் என்றால், அவர் முற்றிலுமாக அழிக்கப்படும் அபாயம் இருந்தது.

இது ஒருபோதும் எவராலும் அழிக்க முடியாத வரலாற்று உண்மையாகும். ஆனால், இன்றைய காலத்தில் இந்த வரலாற்று உண்மை ஒரு பழங்கால கதைகள் போன்று (மரபு வழிச் செய்தியாக) ஆகிவிட்டது. இதனை ஒரு கடந்த கால கதையாக கூறுவதற்கு மட்டும் நன்றாக இருக்கிறது. (ஆனால் பின்பற்றுவதற்கு அல்ல) என்பது மிகவும் வருந்தத்தக்கதாகும். [இன்றைய முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்களின் பார்வையில் ஒரே மாதிரியாக] இது ஒரு நம்பமுடியாததாகவும் கேலிக்குரியதாகவும் தோன்றலாம். குறிப்பாக, தற்போதைய சூழலில், இஸ்லாத்தின் முதலாவது மற்றும் உண்மையான வீரர்களின் முன்மாதிரியான செயல்திறன் மற்றும் சிறந்த சாதனையின் மீதான முஸ்லிம்களின் (இன்றைய) நடவடிக்கை யானது ஒரு பெரிய கரும்புள்ளி போன்று ஆகிவிட்டது.

முஸ்லிம்களை எந்த நோய் கடந்து வந்துள்ளது?

ஹிஜ்ரி பதின்மூன்றாம் ஆண்டு முடியும் வரை முஸ்லிம்கள் மட்டுமே மரியாதை, கண்ணியம், அதிகாரம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றைக் கொண்டிருந்தனர் என்பதை வரலாறு காட்டுகிறது. ஆனால் நாம் நமது கண்களை வரலாற்றின் பக்கங்களில் இருந்து திருப்பி இன்றைய முஸ்லிம்களைப் பார்க்கும்போது,  கஷ்டங்களிலும், அவமானத்திலும் மூழ்கியிருக்கும் ஒரு சமூகத்தை நாம் காண்கிறோம், உண்மையான பலம், அதிகாரம், மரியாதை அல்லது கண்ணியம் இல்லாத, சகோதரத்துவம் இல்லாத, இஸ்லாத்தின் உண்மையான பிரதிநிதித்துவம் இல்லாத, மக்களைக் காண்கிறோம். ஒரு காலத்தில் ஒவ்வொரு முஸ்லிமிடத்திலும் இருந்த அசாதாரணமான செயல்களின் எந்த தடயத்தையையும் நாம் இன்று காண முடியவில்லை. இப்போதெல்லாம், நாம் அரிதாகவே தூய மற்றும் நேர்மையான மனசாட்சி கொண்ட முஸ்லீமைக் காண்கிறோம். அதற்கெதிரில், முஸ்லிம்கள் தீமைகள் மற்றும் பாவங்களில் வீழ்ந்து கிடக்கின்றனர்.

அவர்கள் நற்செயல்களின் பாதையில் இருந்தும், வெற்றிக்கு எப்போதும் உத்தரவாதம் அளிக்கும் பாதையில் இருந்தும், வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டனர். முஸ்லிம்களின் பலவீனங்களை மகிழ்ச்சி, கேலி மற்றும் வெறுப்புடன் இன்றைய இஸ்லாத்தின் எதிரிகள் பேசவும், விவாதிக்கவும் செய்கின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக பிரச்சனை அத்துடன் நிற்கவில்லை. இந்த புதிய தலைமுறையின் முஸ்லிம் இளைஞர்கள் நவீன போக்குகள் என்று அழைக்கப்படுபவைகளாலோ, இன்னும் மேற்கத்திய நாகரீகத்தினாலோ (ஃபேஷன்), ஈர்க்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மேற்கத்திய நாகரீகமானது இஸ்லாத்தின் கொள்கைகளை கேலி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறது. மேலும் அவர்கள் ஷரீஅத்தை, இஸ்லாத்தின் தூய நெறிமுறையை வெளிப்படையாக விமர்சிக்கிறார்கள்; ஷரீஅத் பழமையானதென்றும் நடைமுறைப்படுத்த சாத்தியமற்ற தென்றும் அவர்கள் கூறுகிறார்கள். இவர்களின் அத்தகைய நடத்தையால் நாம் ஆச்சரியப்படுகிறோம்! -

வலிமை, ஸ்திரத்தன்மை, செழிப்பு, அமைதி மற்றும் மரியாதை ஆகியவற்றை முழு உலகிற்கும் கொண்டு வந்த மக்கள், தற்போதோ அவர்கள் மனச்சோர்வு அடைந்தவர்களாகவும், முற்றிலும் உறங்குபவர்களாகவும், ஒன்று மற்றவர் களாகவும், ஆதரவற்றவர்களாகவும் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள்.ஒரு காலத்தில் முழு உலகிற்கும் நல்லொழுக்கப் பாடங்களையும் நல்ல நடத்தையையும் கற்றுக் கொடுத்த மக்களோ, தற்போது இந்த நற் குணங்களில் இருந்து பின்தங்கி விட்டனர்.

நிலைமையை மாற்றுவதற்கான முதல் முயற்சிகள்

நீண்ட காலமாக, அறிஞர்களும், இஸ்லாத்தின் பாதுகாவலர்களும், அவர்களது சமூகத்தின் பேரழிவுக்குரிய நிலைமையை குறித்து ஆழ்ந்து சிந்தித்து முஸ்லீம்களை சீர்திருத்துவதற்காக ஏராளமான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக, அவர்களால் அவர்களின் பணியைச் செய்ய முடியவில்லை!

அவர்கள் பயன்படுத்திய தீர்வுகள் மற்றும் முடிவுகள் நோயை மேலும் மோசமாக்கியது. நிலைமை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டே செல்கிறது, வரவிருக்கும் நாட்கள் இன்னும் இருண்டதாக இருக்கும் என்பதாகத் தெரிகிறது. தற்போதைய சூழ்நிலையில் சும்மா உட்கார்ந்து கொண்டு திருப்தியாக இருப்பது பெரும் பாவமாகவும், மன்னிக்க முடியாத குற்றமாகவும் ஆகிவிட்டது. ஆனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி முடிவு எடுப்பதற்கு முன்பு,அத்தகைய ஒரு மோசமான நிலைமையை கொண்டு வரும் உண்மையான காரணத்தை நாம் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

இந்த சீரழிவுக்கு மக்கள் பல காரணங்களைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் நிலைமை இன்னும் மோசமடைவதில் இருந்து தடுப்பதற்கு பல தீர்வுகளையும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் இன்னும் அதிகமான விரக்திக்கே வழிவகுத்துள்ளன. முன்னேற்றத்தின் பக்கம் செல்வதற்கு பதிலாக, குறிப்பாக பிரச்சாரம் செய்பவர்கள் மற்றும் உலமாக்களுக்கு மத்தியில் விரக்தியும் குழப்பமும் உள்ளே வந்துவிட்டது. உண்மை என்னவென்றால் இந்த நோய்க்கான உண்மையான வேரைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டார்கள் என்பதாகும். இந்த நோய்க்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்கப்படாத வரை, முஸ்லிம்களால் எந்த சிகிச்சையையும், அதைப் பயன்படுத்துவதற்கு அதற்கும் குறைவான ஒன்றை பரிந்துரைக்கவும் முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளில், சில நிவாரணத்தையோ அல்லது முன்னேற்றத்தையோ நம்மால் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? நோயின் உண்மையான காரணத்தை அறியாமல் பயன்படுத்தப்பட்ட எந்த ஒரு சிகிச்சையும் நிலைமையை மேலும் சீர்கெடச் செய்து அதிகமான குழப்பத்தையும் ஊக்கமின்மையையும் கூட கொண்டு வந்து விடும்.

பிரச்சனையை எவ்வாறு பார்க்க வேண்டும்?

‘ஷரீஅத்’ என்பது அல்லாஹ்விடம் இருந்து நேரடியாக வருகின்ற ஒரு புனிதமான செயல்முறை விதிகளாகும் என்பதை இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது. இது நமக்கு ஒரு முழுமையான வாழ்க்கை முறையை உறுதிப்படுத்தி முன்னோக்கி செல்வதற்கான ஒவ்வொரு சாத்தியமான வழிவகைகளையும்

உண்மையான வெற்றியையும், நன்மைக்கான பாதையில் முன்னேற்றத்தையும் நமக்கு வழங்குகிறது. நாம் எந்தப் பாதையை மேற்கொள்ள வேண்டும் என்பதை நமக்குத் தெளிவாகச் சுட்டிக் காட்டி, அந்த பாதையை சரிபார்த்து செயல்படுத்துவதற்கான முறைகளையும் நமக்குக் கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முஹம்மதிய்ய உம்மத்தின் ஷரீஅத்தானது அனைத்து முஸ்லீம்களின் பௌதீக மற்றும் ஆன்மீக நல்வாழ்விற்கும், வாழ்நாள் முழுவதும் எல்லா சந்தர்ப்பங்களிலும், ஏன் கியாமத் நாள் வரை அவர்களின் முன்னேற்றத்திற்கும் முழு உத்திரவாதம் வழங்குகின்றது. ஷரீஅத்தின் விதிமுறைகளுக்கும் அப்பால் (சென்று), மோசமடைந்துள்ள இந்த தற்போதைய சூழ்நிலையின் காரணத்தையும் தீர்வையும் நாம் தேடினோம் என்றால், நாம் நமது நேரத்தை இழக்க நேரிடும் என்பதுத் தெளிவாகிறது. எனவே, நாம் அவசியமாக குர்ஆன்-ஏ-கரீமை ஆழமாக ஆராய வேண்டும். குர்ஆன்- அதுவே ஷரீஅத்தின் அடிப்படையும் அனைத்து ஞாணங்கள் மற்றும் மனிதகுலம் அனைத்திற்குமான வழிகாட்டுதலின் மூலாதாரமும் ஆகும்.

நிச்சயமாக மனிதனுக்கான ஞானத்தின் ஒரே மூலாதாரம் குர்ஆன் மட்டுமே ஆகும். நாம் நமது நோயை முழுமையாக குணப்படுத்த வேண்டுமென்றால் நாம் நமது சிரமங்கள் என்ன என்பதை கண்டுபிடித்து அதனை எவ்வாறு அகற்றுவது என்பதற்கு நாம் குர்ஆனின் உதவியை நாட வேண்டும். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்தவுடன் நாம் தீர்வைப் புரிந்துகொண்டு அதைப் பயன் படுத்துவதற்கு உறுதியான முடிவை எடுக்க வேண்டும். குர்ஆனின் ஞானமும் வழிகாட்டுதலும் குறிப்பாக நாம் கடந்து சென்று கொண்டிருக்கும் தற்போதைய சூழலிலும் நெருக்கடியான சூழ்நிலையிலும் நம்மை ஒருபோதும் கைவிடாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் குர்ஆன் மற்றும் சுன்னத்தில் உள்ள உண்மையான தீர்வை [சிகிச்சையைத்] தேடுவோம்.

பிரச்சினைகளை நாம் ஆராய்வோம்!

முழு பிரபஞ்சத்தின் படைப்பாளனாகிய அல்லாஹ் (தபாரக்), ஆட்சி செய்யும் அதிகாரத்தையும், பூமியில் மீதான கிலாஃபத்தையும், உண்மையான முஸ்லிம்களுக்கு அதாவது முஃமீன்களுக்கு மட்டுமே வழங்கியுள்ளான். இது திருக் குர்ஆனின் இந்த வசனத்தின் மூலம் தெளிவாகிறது:

“உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை பூமியில் நிச்சயமாக கலீஃபாக்களாக்கி வைப்பதாக அல்லாஹ் வாக்குறுதி அளித்திருக்கிறான்". (அந் நூர் 24:56)

உண்மையான நம்பிக்கையாளர்கள் எப்போதும் நிராகரிப்பவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற உத்தரவாதத்தையும் கூட அவன் வழங்குகிறான், என்றும் அதனால் நிராகரிப்பவர்கள் ஆதரவாளர்களோ அல்லது உற்ற நண்பர்களோ இல்லாமல் பின்தங்கி இருப்பார்கள் என்று இந்த வசனத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது:

"நிராகரிப்பவர்கள் உங்களுடன் போர் செய்திருப்பார்களாயின், அவர்கள் புறங்காட்டிப் பின் வாங்கியிருப்பார்கள்; அதன் பின் அவர்கள் தங்களுக்குப் பாது காவலரையோ, உதவி செய்வோரையோ காண மாட்டார்கள்" (அல் ஃபத்ஹ் 48:23)

உண்மையான முஸ்லிம்களுக்கு சாத்தியமான உதவிகள் அனைத்தையும் வழங்க அல்லாஹ் (தபாரக்) தானே பொறுப்பேற்றுக் கொண்டான் என்பதையும், இந்த மக்கள் எப்போதும் கண்ணியத்தையும் புகழையும் பெறுவார்கள் என்பதற்கு அவன் உறுதியளித்துள்ளான் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இது பின்வரும் இந்த வசனங்களின் மூலம் உறுதிப் படுத்தப் படுகின்றது:

“முஃமின்களுக்கு - நம்பிக்கை யாளர்களுக்கு உதவி புரிதல் நம் மீது கடமையாகும்". (அர் ரூம் 39:48)

“எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொல்லாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.” (ஆல இம்ரான் 3: 140)

“கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது” (அல் முனாஃபிகூன் 63:9)

இந்த புனிதமான அறிவிப்புகள் முஸ்லிம்களுக்கு, அவர்களது கண்ணியம், மகத்துவம், பெருமை, மரியாதை மற்றும் மதிப்பை மீட்டெடுக்கும் பாதையை தெளிவாக நிரூபிக்கின்றன. அது உண்மையில் திடமான ஈமான்அதாவது நம்பிக்கையில் உள்ளது. அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் அவர்களின் தொடர்பு உறுதியாகவும், உண்மையாகவும் இருந்தால், அவர்கள் பூமியில் உள்ள அனைத்தையும் கட்டுப்படுத்தி வழி நடத்துவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால், மறுபுறம், அவர்களின் நம்பிக்கை பலவீனமாகிவிட்டாலோ அல்லது இதயத்திலிருந்து வெளியேறி விட்டாலோ, தானாகவே நாம் அதாவது முஸ்லிம்கள் நிலைகுலைந்து, நமக்குப் பேரழிவு ஏற்பட்டுவிடும். இந்த குர்ஆன் வசனத்திலிருந்து இது தெளிவாகிறது:

"காலத்தின் மீது சத்தியமாக!நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர! (அல் அஸ்ர் 103:2-4)

முன்பு விளக்கியதைப் போன்று, ஆரம்பகால முஸ்லிம்கள் கௌரவத்திலும் மகத்துவத்திலும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அதேவேளையில் நவீன கால முஸ்லிம்கள் எதிர்திசையில் சென்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. ஆரம்பகால முஸ்லிம்களின் ஈமான் திடமாகவும் நேர்மையாகவும் மேலும் அவர்களின் குணாதிசயங்கள் மிகச் சிறந்ததாகவும் இருந்த காரணத்தால் அவர்கள் இந்த உயர்நிலையை அடைந்தார்கள் என்பது இவ்வசனங்களிலிருந்து தெளிவாகிறது.

இன்னொரு பக்கம் முஸ்லிம்களின் நிலை தற்காலத்தில் வருந்தத்தக்கதாக ஆகிவிட்டது. ஏனெனில் ஆரம்பகால முஸ்லீம்களிடம் நாம் காணும் தன்மைக்கு எதிரானதாக அவர்களின் நம்பிக்கையிலும் அவர்களின் குணங்களிலும் பல பலவீனங்கள் உள்ளன. எனவே, இனைறைய முஸ்லிம்கள் பெயரளவில் மட்டுமே முஸ்லீம்களாக உள்ளனர் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

இதே சூழல் நிலவுவதை அல்லாஹ்வின் உண்மையான தூதர் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் முன்னறிவித்தார்கள் : "விரைவில் ஒரு காலம் வரும் அப்போது இஸ்லாம் பெயரளவில் மட்டுமே இருக்கும் குர்ஆன் அதன் எழுத்தளவில் மட்டுமே இருக்கும்”.

இன்றைய முஸ்லிம்களுக்கு இது தெளிவாகப் பொருந்தும். இத்தகைய ஒரு சூழ்நிலையில் இந்த குறிப்புகளை கூடிய விரைவில் கவனத்தில் எடுத்துக் கொள்வது அவசியமானதாகும்:

1. அல்லாஹ்வாலும் அவனது தூதராலும் அங்கீகரிக்கப்பட்ட, ஆன்மீக மற்றும் பௌதீக முன்னேற்றத்தை கொண்டுவரக் கூடிய உண்மையான இஸ்லாம் எங்கும் இல்லை என்பது உண்மை. அவ்வாறாயின் எந்த வழிவகைகளில் அந்த உண்மையான இஸ்லாத்தை நம்மால் மீண்டும் கண்டுக் கொள்ள முடியும்?

2. இந்த உண்மையான இஸ்லாத்தின் மறைதல் எதனால் ஏற்பட்டது? அதனுடன் சேர்ந்து 'இஸ்லாத்தின் (ரூஹ்) ஆன்மா' அழிவுக்கு காரணமான முஸ்லிம்களின் வாழ்க்கையை விட்டு ஏன் வெளியேறியது?

நாம் குர்ஆனைப் படிக்கும்போது,  உண்மையான ஈமானையும் இஸ்லாத்தையும் தேவையான அளவில் எவ்வாறு கடைப்பிடிப்பது என்பதைத் தெளிவாகக் காண்போம், பின்னர் கண்ணியம் மற்றும் பெருமையின் பதவிகளை அடைதல் என்பது சிறப்புப் பணியைச் சார்ந்து இருக்கிறது. அதனை அல்லாஹ் (தபார) தனது எல்லையற்ற அருளால் முஸ்லிம்களுக்கு மட்டுமே வழங்குகிறான். இதன் காரணமாகவே குர்ஆனில் முஸ்லிம்களுக்கு கைருல்-உம்மத் (மக்களில் சிறந்தவர்கள்) என்ற இந்த உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தீன்-ஏ-இஸ்லாத்தின்படி, அல்லாஹ்வின் புனிதத்தன்மை, தனித்துவத்தன்மை மற்றும் உன்னத இருப்பை நிறுவி நிரூபித்து மனிதர்கள் மூலம் அவனது எல்லையற்ற ஆற்றல்களையும், வரம்பில்லா குணங்களையும் காட்டுவதே பிரபஞ்சத்தை படைத்ததற்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் ஆகும்.

உண்மையான அறிவின் ஒளியைக் கொண்டு மனிதனை வழிநடத்த முடியும், ஆனால் அதற்கு முன் அவர் முதலில் அனைத்து அசுத்தங்கள் மற்றும் ஒழுக்கக் கேடுகளிலிருந்தும் தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தூய்மைப் படுத்துதலுக்குப் பிறகுதான் மனிதன் தன்னைத் தானே நல்ல குணங்களுடன் சரியாக்கிக் கொண்டு சிறந்த குணத்தையும் நன்மை செய்யும் திறனையும் வளர்த்துக் கொள்ள முடியும். இந்த காரணத்திற்காகவே அல்லாஹ் (தபாரக) மனிதனை தூய்மைப்படுத்தி [இன்சான்] அவனுக்குள் நன்மை செய்யும் திறனை வளர்த்தான். மேலும் முழு மனித இனத்தின் பரிபூரணமானவர் அனைத்து தூதர்களின் தலைவரான, நமது நேசத்திற்குரிய ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆவார்கள். அன்னார் மூலமாகவே மனித இனம் முழுமையான தூய்மைப் படுத்துதலை அடையும் வரை மனம் மற்றும் உடலின் வளர்ச்சியில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளது. அப்போதுதான் மனிதன் பின்வரும் வசனத்திலன் (மூலம்) நற்செய்தி கிடைக்கப் பெற்றான்:

"இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது எனது அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்". (அல் மாயிதா 5:4)

மனிதனது படைப்பின் மிக உயர்ந்த நோக்கம் இறுதியாக நிறைவேறியது [இஸ்லாத்தில் நிறைவேறியது]; நன்மையும் தீமையும் தெளிவாக பிரிக்கப்பட வேண்டும்; ஒரு முழுமையான வாழ்க்கை முறை வெளிப்படுத்தப் பட்டது; மேலும் மிக முக்கியமானது (ஷரீஅத்) சட்டத்தைத் கொண்டுள்ள நுபுவ்வத்தின் முன்னறிவித்தலின் சங்கிலி மற்றும் நபித்துவம் [நுபுவ்வத்] - முடிவடைந்து விட்டது, ஆயினும் அல்லாஹ் (தபாரக்) இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களின் நிலைத்திருத்தலுக்காக, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் சீர்திருத்தும் பணியை நிறை வேற்றுவதற்காக குர்ஆன் மற்றும் நபி கரீம் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் சுவாசத்திலிருந்து வருகிற ஓர் இஸ்லாமிய நுபுவ்வத்தை பாதுகாத்து வைத்துள்ளான்.

தற்போது, ​ அத்தகைய ஒரு தீர்க்கதரிசி-சீர்திருத்தவாதியின் முன்னிலையில், இஸ்லாம் தனது வாழ்வை மீண்டும் பெறுகிறது, ஆனால் அவர் இல்லாத நிலையில், அத்தகைய சீர்திருத்தவாதி இன்னும் தோன்றவில்லை என்றால், பிறகு இஸ்லாத்தைப் பாதுகாப்பது உம்மத்தே முஹம்மதியாவின் (அதில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் முழுவதின் கூட்டமைப்பு) இன் கூட்டான பொறுப்பாக உள்ளது.

இந்தப் பொறுப்பு பின்வரும் குர்ஆன் வசனங்களில் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது:

"மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக (முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றக் கூடிய) நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்". (ஆல இம்ரான் 3:111)

"(மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்". (ஆல இம்ரான் 3:105)

முதல் வசனத்தில், முஸ்லிம்கள் ஏன் 'கைருல் உம்மத்' (மக்களில் சிறந்தவர்கள்) என்று அழைக்கப்பட்டார்கள் என்பதை அல்லாஹ் (தபாரக) குறிப்பிட்டுள்ளான். அவர்கள் நல்லதை ஊக்குவித்து தீமையை தடை செய்கிறார்கள் என்பதே இதற்குக் காரணம் ஆகும். இரண்டாவது வசனத்தில் இந்த கடமையை நிறைவேற்றுபவர்கள் [பூமியின் மீதான] இந்த (உலக) வாழ்வில் வெற்றியடைந்து கௌரவத்தை- கண்ணியத்தை பெறுவர் என்பதை அல்லாஹ் (தபாரக) தெளிவுபடுத்தியுள்ளான்.

இந்த கட்டளை இத்துடன் நிற்காது. நாம் இந்த அவசியமான பணியைச் செய்யவில்லை என்றால், பிறகு சாபமும் பேரழிவும் நம் மீது ஏற்பட்டுவிடக்கூடும் என்று மற்றொரு இடத்தில் குறிப்பிட்டுள்ளான். (இறைவனது) இந்தத் தீர்மானத்தை (பின்வரும்) இந்த வசனத்தில் நம்மால் காண முடியும:

"இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, நிராகரிப்பாளராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள். இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்". (அல் மாயிதா 5: 79-80)

ரஸுலுல்லாஹ்(ஸல்) அவர்களின் ஹதீஸ்களும் கூட இதனை விரிவாக விளக்கி, இந்த குர்ஆன் வசனங்களை இன்னும் தெளிவாக்குகின்றன.

அடுத்த வாரம் எனது குத்பாவில் இந்த ஹதீஸ்களுடன் வருகிறேன்.

உம்மத்தைப் பாதிக்கும் இந்தப் பிரச்சனைகளை மற்றும் ஒருவருக்கு என்ன தேவை என்பதைப் பற்றி தொடர்ந்து விளக்கவும் இந்தப் பிரச்சனைகளை நீக்கி இஸ்லாத்தின் மறுமலர்ச்சியை [மீண்டும் ஒருமுறை] செயல்படுத்த வேண்டும். இன்ஷா அல்லாஹ், ஆமீன்.

அல்லாஹ் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அனைத்து துன்பங்களிலிருந்தும் காப்பாற்றுவானாக! ஷைத்தான் நம்மைப் பிளவுபடுத்தவும், நம்மிடையே பிரச்சனையையும் குஃப்ரை [அவநம்பிக்கையை]யும் விதைப்பதற்கு, எல்லா வகையிலும் முயன்று கொண்டிருக்கின்ற நிலையில் முஸ்லீம்களை தமதுத் தூக்கத்திலிருந்தும் எழுந்திருக்க அல்லாஹ் அனுமதிப்பானாக! அல்லாஹ் இந்த முக்காடுகளை அகற்றி, இஸ்லாமியர்களை இஸ்லாத்திற்கு எதிரான போதனைகளைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டு, அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையுடனும், அச்சத்துடனும் அவன் நம்மை உண்மையான இஸ்லாத்தை நோக்கி முன்னேறச் செய்வானாக! ஆமீன்!

தப்லீக் பற்றி காலத்தின் இமாம் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள்!

இன்றைய காலத்தில், முஸ்லிம்கள் என்ற முறையில் நம்மைப் பற்றி நாமே பெருமையாக உணர்கிறோம் என்ற உண்மை இருந்த போதிலும், இந்த மாபெரும் இழப்பை நிறுத்த...